Thalapathy 68 - தளபதி 68ல் இணையும் இரண்டு பேர்?.. அடடா அந்த ஹீரோவும் இருக்காரா?.. பார்க்கவே சூப்பரா இருக்குமே
சென்னை: Thalapathu 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68ல் இரண்டு பேர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தாவை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் விஜய்: இந்தச் சூழலில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் வெளியானது. மேலும் அந்தப் புகைபடத்தோடு எதிர்காலத்துக்கு வருக என்று கேப்ஷன் போட்டிருந்தார். எனவே இது சைன்ஸ் பிக்ஷன் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். ஸ்கேனை முடித்துவிட்டு தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்க்கும் புகைப்படத்தையும் வெங்கட் பிரபு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை: இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் என்றும்; அதில் ஒன்று வயதான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த வயதான விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அதற்கு ஜோதிகா ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. அவரை அடுத்து சிம்ரனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய கடைசியாக சினேகாவை அந்த கேரக்டருக்கு லாக் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர ப்ரியங்கா மோகனும் நடிக்கலாம் என தெரிகிறது.
தர லோக்கல்: அதேபோல் படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசியபோது விஜய்க்கான ஓபனிங் பாடல் தர லோக்கலாக இருக்கும் என தெரிவித்திருந்தார். யுவனின் பாடல்களும் இசையும் எப்போதும் ஆட்டம் போட வைப்பவை என்பதால் அதில் விஜய் ஆடுவது வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர்.
பிரபுதேவா, பிரசாந்த்: இந்நிலையில் தளபதி 68 குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் பிரபுதேவாவும், பிரசாந்த்தும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பிரசாந்த் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்க காத்துக்கொண்டிருக்கிறார். எனவே விஜய்யுடன் அவர் நடிக்கும்பட்சத்தில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக இதில் நடிக்க பிரசாந்த் விருப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிரபுதேவா ஏற்கனவே விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











