Ilayaraaja Biopic - தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: Ilayaraaja Biopic (இளையராஜா வாழ்க்கை வரலாறு) தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் இசையில் தவிர்க்க முடியாத ஆளுமை இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தனக்கென கோட்டையை கட்டி வைத்திருக்கும் இளையராஜாவுக்கு அனைவருமே ரசிகர்கள். இந்த சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாகவும் அதில் தனுஷ் இளையராஜா கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியது.

Here is the Official Announcement about Ilayaraaja Biopic

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் இளையராஜா பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்னிந்திய திரைத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து உருவாக இருக்கும் பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமையடைகிறோம்.

ஒரிஜினல் கதைகள்: மெர்குரி க்ரூப் இந்தியா, தென்னிந்திய பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொட்னு கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்பு பிரிவாக இங்கு செயல்பட இருக்கிறது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள், ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய ஜானர் கதைககளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும்.

இளையராஜா பயோபிக்: சிறந்த வணிகத்துடன் ஆரோக்கியமான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பையும் ஆராயும். இந்த கூட்டணி முதல் திரைப்படமாக தென்னிந்திய திரையுலகில் மாபெரும் சாதனையாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறது. இந்தில் நட்சத்திர நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி 2025ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்படிருக்கிறது

அடுத்தக்கட்டம்: இந்தத் தயாரிப்பு கூட்டணி தென்னிந்திய திரைத்துறையில் பொழுதுபோக்கினை உலக தரத்துடன் அடுத்தக்கட்டத்து எடுத்து செல்வதுடன் ரசிகர்களுக்கு சிறந்த கதைகளை கொண்டு வர முயற்சிக்கும். அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்பத்துக்கு இணையான வளர்ச்சியை தென்னிந்திய திரைத்துறையில் கொண்டு வருவதில் இந்தக் கூட்டணி உந்துகோலாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X