Priyanka - சிறு வயதிலேயே தந்தையை இழந்த ப்ரியங்கா.. அவ்வளவு ஜாலியான ஆளுக்குள் இவ்வளவு சோகமா?
சென்னை: Anchor Priyanka (தொகுப்பாளினி ப்ரியங்கா) தொகுப்பாளினி ப்ரியங்கா தனது வாழ்க்கையில் நடந்த கதையை கூறி அனைவரையும் கலங்கடித்துவிட்டார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5க்குள் இருக்கும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்

ப்ரியங்கா: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ரியங்கா தேஷ்பாண்டே. அவர் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளியவர். தனது நகைச்சுவைத்தனமான பேச்சாலும், டைமிங் காமெடிகளாலும் நிகழ்ச்சியை போர் அடிக்காமல் நகர்த்தி செல்வார்.
பிக்பாஸ்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது ஆங்கர் பணியை சிறப்பாக தொடர்ந்துவருகிறார் ப்ரியங்கா.
சூப்பர் சிங்கர் ஜூனியர்: அந்தவகையில் தற்போது அவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ஆவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். இந்த சீசனில் சனு மித்ரா என்ற சிறுமி போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். இசையமைப்பாளர் தமன், பாடகி சித்ரா உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் சனு மித்ரா அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், "சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆடிஷனுக்கு என்னை விட்டுவிட்டு செல்லும்போது எனது தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்" என்றார். அது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.
ப்ரியங்காவின் சோகக் கதை: இதனையடுத்து மாணவியை தேற்றும் விதமாக பேசிய ப்ரியங்கா,"என்னுடைய தந்தை நான் 11 வயதில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அப்பா இறந்த பிறகு தந்தைதான் சிங்கப்பெண் மாதிரி என்னையும், எனது சகோதரரையும் தனி மனுஷியாக இருந்து வளர்த்தார் என அழுதபடியே சொன்னார். ஏற்கனவே சிறுமியி சோககத்தையால் கலங்கியிருந்த அனைவரும் ப்ரியங்கா இப்படி பேசியதும் மேலும் கலங்க ஆரம்பித்துவிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஜாலியாக இருக்கும் ஆளுக்குள் எவ்வளவு சோகம் இருந்திருக்கிறது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











