Singapore Saloon Twitter Review - தியேட்டர் முழுக்க கைதட்டல் ஒலிக்குது.. சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கு?
சென்னை: ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இன்று படமானது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் படம் பார்த்தவர்களின் விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.
ரேடியோ ஜாக்கியாக மக்களிடம் வெகு பிரபலமடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. அவரது டைமிங் கவுண்ட்டர்களும், க்ராஸ் டாக் என்ற ஷோவின் மூலம் மக்களிடம் எளிதாக சென்று சேர்ந்தார். 2013ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் அடுத்ததாக தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்தார். சுந்தர்.சி இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பாலாஜியும் நன்றாக நடிக்கிறாரே என்று பெயரை பெற்றுக்கொடுத்தது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: தொடர்ந்து வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரௌடிதான் என ஏராளமான படங்களில் நடித்தார். அந்த படங்களில் பாலாஜியின் நடிப்பு வெகுவாகவே கவர்ந்தது. முக்கியமாக விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் பாலாஜியின் நடிப்பும், கவுண்ட்டர்களும் ரசிகர்களை கவர்ந்தன.
முழு நேர நடிகர்: நானும் ரௌடிதான் படத்துக்கு பிஸியாக நடிக்க ஆரம்பித்த ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதன்படி எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர்; தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மூக்குத்தி அம்மன் படத்துக்கு கதை எழுதிய அவர்; வீட்ல விசேஷம் படத்துக்கு திரைக்கதையும் எழுதினார்.
சிங்கப்பூர் சலூன்: இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் படத்தை தயாரித்திருக்கிறார். படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இந்த சூழலில் படம் பார்த்த பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்: பிரபல திரை விமர்சகரான பிரசாந்த், சிங்கப்பூர் சலூன் இடைவேளை காட்சி Fun Max.. சத்யராஜின் ஒவ்வொரு நடிப்புமே கண்டிப்பாக மீம் மெட்டீரியலாக மாறும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
கைத்தட்டல் ஒலிக்கிறது: அதேபோல் படம் பார்த்த இவர், ஒரு முடி திருத்தும் கலைஞன் பின்னணியில் காமெடி கலந்த அழுத்தமான கதை. அந்த கிளி சீன் டச்சிங். நெல்லை பின்னணியில் பிளாஷ்பேக் சீன் பீலீங். உலகில் அனைத்து முடி திருத்தும் கலைஞர்களுக்கும் இந்த படம் சமர்பணம் என்று கடைசியில் கார்டு போடுகிறார்கள். தியேட்டரில் கைதட்டல் ஒலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காமெடியில் கலக்கியிருக்கிறார் சத்யராஜ். ஒரு பாரில் நாலு பீர் அடித்து விட்டு சத்யராஜ் பண்ணுற அமர்களம் செம. அந்த காட்சிக்காகவே பல முறை படம் பார்க்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
முதல் பாதி செம: முதல் பாதி மொத்தமாக ஃபன். இரண்டாம் பாதி மொத்தமாக எமோஷன்.சிம்ப்பிள் ப்ளாட்டை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அரவிந்த சாமியின் கேமியோ ரோல் மனதை தொடும்படி இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











