Bigg Boss 7 Promo - பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை பட்டினி போட்ட ஸ்மால் பாஸ் வீட்டுக்காரர்கள்.. அதிரடி ப்ரோமோ

சென்னை: Bigg Boss 7 Promo (பிக்பாஸ் 7 ப்ரோமோ) தங்களால் சமைக்க முடியாது என ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட்டிருக்கும் பிக்பாஸ் 7 ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த ஆறு சீசன்கள் போலவே இந்த சீசனும் களைகட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் இந்த சீசனும் நடந்துகொண்டிருக்கிறது. கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் பெரும்பாலானோர் பிரபலமானவர்கள் இல்லை என்றாலும் கண்டெண்ட் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

Here is the Today Bigg Boss 7 Episode First Promo Video

பிரதீப்: அந்தவகையில் முதல் கண்டெண்ட்டாக இருப்பவர் பிரதீப் ஆண்டனி. வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்து முழுக்க முழுக்க அவரது மைண்டுக்குள் இந்த கேமில் வெல்ல வேண்டும் என்றுதான் இருக்கிறது. இதன் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரையும் போட்டு தாக்குகிறார். அதனால் ஹவுஸ் மேட்ஸுடன் அவருக்கு உரசல்கள் அதிகம் உருவாகியுள்ளன. சமீபத்தில்கூட நிக்ஸன் பிரதீப்பை ஒருமையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பவா செல்லதுரை: இந்த சீசனின் போட்டியாளர்களில் பலரையும் ஆச்சரியப்படுத்திய போட்டியாளர் என்றால் அவர் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரைதான். இலக்கிய உலகில் ரொம்பவே பரிச்சயமான பவா இந்த வீட்டுக்குள் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியே அதிகம் எழுந்தது. இருந்தாலும் அவர் உள்ளே சென்றது சரிதான் என ஒருசிலர் கூறினர். ஆனால் இந்த வீட்டுக்குள் தன்னால் இருக்க முடியாது என்று கூறி தாமாகவே வெளியேறினார்.

அனன்யா: இதற்கிடையே அனன்யா ராவ் முதல் ஆளாக எவிக்‌ஷன் ஆனார். பவா செல்லதுரையும் வெளியேறிவிட்டதால் இப்போது வீட்டுக்குள் 16 பேர் இருக்கின்றனர். மேலும் ஒருவர் வீட்டுக்குள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மாயா தப்பித்துவிட்டார் என்றும் பலர் கூறுகிறார்கள்.

Here is the Today Bigg Boss 7 Episode First Promo Video

வலுக்கும் சண்டை: இந்த சூழலில் இன்றைக்கான பிக்பாஸ் 7 ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப், விஷ்ணு, மாயா உள்ளிட்டோர் எங்களால் சமையல் செய்ய முடியாது. நாங்கள் ஸ்ட்ரைக் செய்கிறோம் என்று கூறுகிறோம். அதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் யுகேந்திரன் உள்ளிட்டோர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை எடுத்துவரும்படி அந்த ப்ரோமோவில் காட்சிகள் இருக்கின்றன. இதனால் இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ என்ன இந்த சீசனில் சண்டை இப்படி நாறுது என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X