சந்தானம் - யோகிபாபு காம்பினேஷன்.. இந்த 5 காரணங்களுக்காக டகால்டி படத்தை தாராளமா பார்க்கலாம்!

Recommended Video

Dagalty பார்க்க 5 காரணங்கள் | Santhanam | Rittika Sen | Vijay Anand

சென்னை: ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் தயாரிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படம் நாளை திரைக்கு வருகிறது.

சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, ஜாலியா தியேட்டருக்கு குடும்பத்துடன் வந்து என்ஜாய் பண்ண டகால்டி திரைப்படம் நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டகால்டி திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முக்கியமான 5 காரணங்கள் குறித்து இங்கே காண்போம்.

ரித்திகா சென்

ரித்திகா சென்

விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள டகால்டி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார். போர்பாத், ராஜா ராணி ராஜி, அர்ஷிநகர், வில்லன், ஜியோ பாக்லா உள்ளிட்ட பல பெங்காலி படங்களில் நடித்துள்ள ரித்திகா சென் டகால்டி படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷங்கர் சிஷ்யன்

ஷங்கர் சிஷ்யன்

ஷங்கர் சினிமா பட்டறையில் இருந்து நிறைய உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய இயக்குநர்களாக மாறியுள்ளனர். ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு

யோகி பாபு

தமிழ் சினிமாவில் தற்போது லீடிங்கில் இருக்கும் காமெடியன் என்றால் அது யோகி பாபு தான். வருஷத்துக்கு 30 முதல் 35 படங்கள் என நடித்து தள்ளுகிறார். வார வாரம் மக்களின் கவலைகளை தியேட்டரில் தீர்த்து வைப்பதே இவரது கவுன்ட்டர் காமெடிகள் தான். சந்தானத்துடன் முதன்முறையாக இணைந்துள்ள யோகி பாபு டகால்டி படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருப்பார்.

சந்தானம்

சந்தானம்

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து வெளியான ஏ1 படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது. பல படங்களில் காமெடியனாக நடித்து தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானம், ஹீரோ ஆன பிறகும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலேயே நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

காமெடி படம்

காமெடி படம்

சந்தானம் - யோகி பாபு காம்பினேஷனில் உருவாகியுள்ள டகால்டி திரைப்படம் நிச்சயம் தியேட்டர்களில் காமெடி சரவெடி செய்யும் என்பது கன்ஃபார்ம். குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று ஜாலியா ஒரு படம் பார்க்கலாம் என நினைக்கும் மக்களுக்கு இந்த வீக் எண்டுக்கான சிறந்த தேர்வு டகால்டி படமாக நிச்சயம் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X