Vijay Daughter Sasha - அப்பா போல்தான் மகளும்.. விஜய் மகளின் செம க்யூட் வீடியோவை பாருங்க

சென்னை: Vijay Daughter Sasha (விஜய் மகள் சாஷா) விஜய் மகள் சாஷா நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் டாப் கதாநாயகர்களில் விஜய் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை வசூலித்துவருவதாக பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக இளைய தளபதியாக உள்ளே வந்தவர் தளபதியாக உயர்ந்து தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் நின்றுகொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக உலக அளவில் 300 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

Here is the trending video of Vijay Daughter Sasha

லியோ: அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். பீஸ்ட் படம் படுதோல்வியை சந்திக்க வாரிசு படம் விமர்சன ரீதியில் அடி வாங்க லியோ படம் நிச்சயம் ஹிட்டடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் அவர். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருப்பதாலும்; கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வான்டட் இயக்குனராக அவர் இருப்பதாலும் நிச்சயம் லியோ இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.

தளபதி 68: இந்தப் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று வெங்கட் பிரபு உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

சர்ச்சைகள்: சினிமாவில் இப்படி பிஸியாக இருக்கும் விஜய் சமீபகாலமாக தனிப்பட்ட வாழ்க்கையில் சில கிசுகிசுக்களையும் சந்தித்து வருகிறார். திரிஷாவுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி இரண்டு பேரும் வெளிநாட்டில் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் கடந்த சில மாதங்களாக மனஸ்தாபம் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவரது குடும்ப விஷயத்தை தேவையில்லாமல் பொதுவெளிக்கு கொண்டு வந்து அவதூறு பரப்புகிறார்கள் என விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தனது குடும்பத்துடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஒரு திருமணத்திற்கு தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகியோருடன் விஜய் சென்ற வீடியோதான் அது. அந்த திருமணத்தில் சாஷா அட்டகாசமாக நடனம் ஆடுகிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் அப்பா போலவே மகளும் அட்டகாசமாக நடனம் ஆடுகிறார் என கூறி அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சாஷா ஏற்கனவே விஜய்யுடன் தெறி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X