Trisha Salary - லியோ படத்துக்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. நயன்தாராவை நெருங்கிடுவாங்க போல

சென்னை: Trisha Salary (த்ரிஷா சம்பளம்) லியோ படத்தில் நடித்ததற்காக த்ரிஷா வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேல் நடித்துவருபவர் த்ரிஷா. ஜோடி படத்தில் சில சீன்களில் தலைகாட்டியவர் அதன் பிறகு அவர் இல்லாத படங்களே தமிழ் சினிமாவில் இல்லை என்ற நிலை உருவானது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர் தற்போது லியோ படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here is the Trisha Salary Details in Leo Movie

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.இந்தப் படத்தில் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விஜய் - த்ரிஷா கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருப்பதாக சிலாகித்தனர்.மேலும் படத்தில் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் கூறினர்.

விடாமுயற்சி: இடையில் சில தடுமாற்றங்களை சந்தித்த த்ரிஷா பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அந்தப் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவையாக கலக்கிய த்ரிஷாவை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தற்போது லியோவில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

Here is the Trisha Salary Details in Leo Movie

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்: ஒருபக்கம் முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டாலும் மறுபக்கம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடிக்கிறார். அதன்படி அவர் நடித்த ராங்கி படம் சுமாரான வரவேற்பை பெற்றது.சமீபத்தில் தி ரோட் படம் வெளியானது. இதனையடுத்து கௌரவ் நாராயணன் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

சம்பளம்: இந்நிலையில் லியோ படத்தில் த்ரிஷா வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் இப்படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டை பொறுத்தவரை நயன்தாராதான் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் பத்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தெரிகிறது.

த்ரிஷா நடித்திருக்கும் லியோ படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். எனவே அடுத்தடுத்த படங்களில் த்ரிஷா கண்டிப்பாக சம்பளத்தை உயர்த்துவார். அதன் காரணமாக சம்பள விஷயத்தில் நயன்தாராவை த்ரிஷா கூடிய விரைவில் நெருங்கிவிடுவார் என்று அவரது ரசிகர்கள் அடித்து கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X