3 இடியட்ஸ்க்கு அப்புறம் கல்வி குறித்த தரமான படம் ஹீரோ.. இதோ ‘ஹீரோ’ ட்விட்டர் விமர்சனம்!

Recommended Video

நல்லா தூங்குனேன் | HERO MOVIE PUBLIC OPINION | FILMIBEAT TAMIL

சென்னை: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் இன்று வெளியாகியுள்ளது.

கல்வியை வியாபாரமாக எப்படி மாற்றுகின்றனர். கல்வி கற்றவர்களை வைத்து எப்படி கல்வி அரசியல் செய்கின்றனர் இதனை தட்டிக் கேட்க ஒரு சூப்பர் ஹீரோ தேவைப்படுகிறான் என இயக்குநர் பி.எஸ். மித்ரன் திரைக்கதையை அழகாகவும் ஆழமாகவும் செதுக்கியுள்ளார்.

ஹீரோ படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் சொல்லும் விமர்சனத்தை இங்கே காண்போம்.

தரமான சம்பவம்

ஹீரோ படத்தில் கல்வி மற்றும் கல்வியை வைத்து செய்யும் வியாபாரம் மற்றும் கொஞ்சம் சென்டிமென்ட் என தரமான சம்பவத்தை செய்துள்ளனர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

3 இடியட்ஸ்க்கு அப்புறம்

ஆமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தில் கல்வியை எதற்காக படிக்கவேண்டும் என்றும் கல்வி குறித்த ஆழமான மற்றும் அழுத்தமான கதை இருந்தது. அதற்கு பிறகு ஹீரோ படத்தில் அதுபோன்ற கதை இருப்பதாக இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

5க்கு 4 மார்க்

சூப்பரான சூப்பர் ஹீரோ படம், யுவன் சங்கர் ராஜாவின் உலகத் தரம் வாய்ந்த பிஜிஎம், சில லாஜிக்கல் ஓட்டைகள் இருந்தாலும், சிவகார்த்திகேயன், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பி.எஸ். மித்ரனின் கடின உழைப்பு படத்தை ஹிட் படமாக மாற்றியுள்ளது. ஹீரோ படத்துக்கு 5க்கு 4 மார்க் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

துபாயில் எழுந்து நின்று பாராட்டு

ஹீரோ படத்தின் எண்ட் கிரெடிட்ஸில் ரியல் ஹீரோக்களை பற்றிய ஏவி போடப்படுகிறது. அதனை அனைவரும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர். இந்நிலையில், துபாயில் அந்த காட்சிக்கு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியதாக இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம்

தீபாவளி ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான பல படங்கள் ஓடவில்லை. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்ததாக இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

அதே வாய்

சீமராஜா படத்தின் போது படம் வொர்த்தே இல்லை ப்ரோ உட்கார முடியல என சொல்லிய அதே நபர், ஹீரோ படம் செம்மையா இருக்கு, குடும்பத்தோட வந்து பார்க்கணும் என சொல்லியுள்ளார். அதனை இந்த ரசிகர் எடுத்து கமெண்ட் செய்துள்ளார்.

யுவன் பேக் டு ஃபார்ம்

யுவன் சங்கர் ராஜா ஹீரோ படத்திற்கு உலகத் தரம் வாய்ந்த பிஜிஎம் போட்டுள்ளார் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அது குறித்த மீம் தான் இது.

அபய் தியோல் வேற லெவல் ஆக்டிங்

ஹீரோ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல் வேற லெவல் ஆக்டிங் செய்துள்ளார் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X