Ajith - நடிகைக்காக அஜித் செய்த விஷயம்.. எப்படியெல்லாம் பண்ணிருக்காரு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை: Ajith (அஜித்) நடிகைக்காக அஜித் செய்த விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதனை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.

தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த பிறகும் அவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Here is the Unknown Details about Ajith in Valimai Shooting Spot

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையே பெற்றது. துணிவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேற மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார்.

விடாமுயற்சி: அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் அஜித்தின் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில்தான் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஏமாற்றம் தந்த வலிமை: இதற்கிடையே ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்பௌத்தியிருந்தது. ஆனால் அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களை படம் திருப்திப்படுத்தவில்லை என்று கூறினர். படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இந்த சூழலில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது வலிமை படத்தில் அஜித்துடன் பணியாற்றும் பெண்ணாக சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். ஆனால் அவர் அஜித்துடன் நடிக்கிறோமே என்ற பதற்றத்திலேயே இருந்திருக்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியாக நான்கு ரீ டேக்குகளை வாங்கினாராம். இதனால் ரொம்பவே டல்லான அவர் வலிமை படத்திலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அஜித் செய்த செயல்: சைத்ராவின் முடிவை தெரிந்துகொண்ட அஜித் அவரை அழைத்து சினிமாவில் ரீ டேக்குகள் வாங்குவது இயல்புதான் என கூறியிருக்கிறார். பிறகு அஜித் நடிக்கும்போது அவரும் நான்கு முறை ரீ டேக்குகளை வாங்கியிருக்கிறார். அதனையடுத்து சைத்ராவை பார்த்து, நானும்தான் 4 ரீ டேக்குகள் வாங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் சைத்ராவை தேற்றுவதற்காக வேண்டுமென்றே அந்த ரீ டேக்குகளை வாங்கினாராம் அஜித். இந்தத் தகவல்தான் தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X