Kanguva - ரசிகர்களை பிரமிப்பின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் கங்குவா.. முழு தகவல்கள் உள்ளே
சென்னை: Kanguva Update (கங்குவா அப்டேட்) கங்குவா படத்தை பற்றிய தகவல்கல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பத்து மொழிகளில்: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பது; இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நம்பிக்கையை காப்பாற்றுவாரா சிவா?: அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி சிவா கிராமத்து பாணியிலான கதைகளை இயக்குபவர். ஆனால் கங்குவா படமோ பீரியட் படமாக உருவாகிறது. எனவே கங்குவா படத்தை சிறப்பாக கொடுத்து தன்னை அவர் நிரூபிப்பாரா என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர்.
பட்டையை கிளப்பிய க்ளிம்ப்ஸ்: சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை சிவா அடித்து நொறுக்கிவிட்டார். அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.
ஆச்சரிய தகவல்கள்: இந்நிலையில் கங்குவா படம் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது. அதாவது இந்தப் படத்துக்கான கேமரா யூனிட் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா ஆகிய படங்களுக்கு கேமரா அனுப்பிய தாஹர் யூனிட்தான் கேமராக்களை அனுப்பியுள்ளதாம். மேலும் சூர்யாவின் மேக்கப்புக்கு இரண்டரை மணி நேரம் செலவாகிறதாகவும்; அதனால் காலை 7 மணிக்கு முதல் ஷாட் என்றால் சூர்யா காலை ஐந்து மணிக்கெல்லாம் மேக்கப்போடு சூர்யா ரெடியாகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் சூர்யாவுக்கு பல கெட்டப்புகள் இருக்கும் என்றும் தெரிகிறது.
பீரியட் போர்ஷன்: கங்குவா படத்தின் கிளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் முழுக்கவும் பீரியட் போர்ஷனாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பினர். ஆனால் பீரியட் போர்ஷன் படத்தில் கொஞ்ச நேரம்தான் வரும் என்றும்; மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படி சிவா திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பீரியட் போர்ஷன்தான் 3டியில் படமாக்கப்படுகிறது என்றும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











