Dhanush - என்னது அவருடன் நான் நடிப்பதா?.. நயன்தாராவுடன் நடிக்க தயக்கம் காட்டிய தனுஷ்.. காரணம் தெரியுமா?
சென்னை: யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுடன் நடிப்பதற்கு தனுஷ் தயக்கம் காட்டிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக அவரது நடிப்பில் வாத்தி படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு தன்னுடைய 50ஆவது, சேகர் கம்முல்லா இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் என படு பிஸியான லைன் அப் வைத்திருக்கிறார்.

ஆரம்பகாலம்: இப்படி தற்போது படு பிஸியாக தனுஷ் ஆரம்பத்தில் ரொம்பவே உருவகேலியை சந்தித்தவர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்து தற்போது நின்று கொண்டிருக்கிறார். அவரது ஆரம்பகாலத்தின் வளர்ச்சிக்கு தனுஷுக்கு பல படங்கள் உதவின. அவற்றில் ஒன்றுதான் யாரடி நீ மோகினி.
தமிழ் ரீமேக்: முதலில் அந்தப் படம் தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி ஹிட்டடித்தது. அதனை அவரது உதவி இயக்குநராக இருந்த மித்ரன் ஆர்.ஜவஹர் தமிழில் ரீமேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் மெகா ஹிட்டாகி தனுஷின் க்ளாசிக் படங்களில் ஒன்று என்ற பெயரை பெற்றிருக்கிறது. படத்தில் இசை, நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் மேக்கிங் என அனைத்துமே பக்காவாக செட் ஆகி மெகா ஹிட்டாகியது படம்.
செம கெமிஸ்ட்ரி: படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இருந்தது தனுஷ் - நயன்தாரா கெமிஸ்ட்ரி. இன்றுவரை கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நினைக்கப்படுவதற்கு காரணம் அந்தப் படம்தான். இந்த சூழலில் யாரடி நீ மோகினி படத்தில் முதலில் நயன் தாராவுடன் நடிப்பதற்கு தனுஷ் தயக்கம் காட்டியது தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது இந்தப் படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்த மித்ரன் தனுஷிடம் கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். பிறகு இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தனுஷோ என்னது நயன்தாராவா அவங்க என்கூட ஸ்க்ரீனில் நின்றால் என்னைவிட முதிர்ச்சியாக தெரிவாங்க என கூறினாராம். ஆனால் விடாத மித்ரன் ஒருவழியாக பேசி தனுஷை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாராம். மித்ரன் ஆர்.ஜவஹர் கடைசியாக தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற ஃபீல் குட் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











