Rajinikanth - மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்.. கண் கலங்கிய ஜாக்கி ஷெராஃப்.. ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் ஜாக்கி ஷெராஃப்பிடம் மன்னிப்பு கேட்டது தெரியவந்திருக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்கிரீன்களில் இந்த படம் திரையிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன

Here is the Unknown Incident about Jailer Shooting Spot

கம்பேக்: ரஜினிக்கும் நெல்சனுக்கும் இந்த படம் கம்பேக்காக அமைய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. படத்தை தனது ஸ்டைலில் டார்க் காமெடி மற்றும் ரஜினியின் ஸ்டைலை வைத்தும் உருவாக்கி இருந்தார் நெல்சன். படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படம் மிகவும் திருப்தி தருவதாகவும் நெல்சன் மற்றும் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்துவிட்டது என்றும் சிலாகித்து வருகின்றனர்.

ஸ்டார்களுக்கு நல்ல ஸ்பேஸ்: வெவ்வேறு மொழிகளில் இருந்து ஸ்டார்களை அழைத்து வந்த நெல்சன் திலீப்குமார் அவர்களுக்குரிய நியாயத்தை சரியாகவே செய்திருக்கிறார் என்று கூறுகின்றனர். சுனிலுக்கு காமெடி போர்ஷன் என்றாலும் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் திரையை தீப்பிடிக்க வைத்ததாக படம் பார்த்தவர்கள் கூறினர். மேலும் அவர்களின் எண்ட்ரிக்கு பயங்கரமான ரெஸ்பான்ஸ் இருந்தது என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்கின்றனர். அதேசமயம் ஜாக்கி ஷெராஃப்புக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

வசூல்: இதுவரை படமானது உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு இன்னமும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்டம் மேற்கொண்டு அதிகரிக்கும் என்றும் இன்றைய நாள் விடுமுறை என்பதால் ரசிகர்கள் பலர் படத்திற்கு செல்வார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.

Here is the Unknown Incident about Jailer Shooting Spot

மன்னிப்பு கேட்ட ரஜினி: இந்நிலையில் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. அதன்படி ரஜினிக்கான போர்ஷன் முடிந்த பிறகு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார். ஆனால் ஜாக்கி ஷெராஃப்பிடம் சொல்ல அவர் மறந்துவிட்டார். அவரிடம் சொல்லாமல் கிளம்பி விட்டோமே என்று பின்னர்தான் அவருக்கு தோன்றியிருக்கிறது.

உடனடியாக மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட் வந்த ரஜினி ஜாக்கியை பார்த்து, உங்களிடம் சொல்லாமல் சென்று விட்டேன் அதற்கு மன்னித்து கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார. இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாக்கி ஷெராஃப் கண்கலங்கி ரஜினியை கட்டி அணைத்து நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்

ரஜினியின் எளிமை: முன்னதாக ஜெயிலர் ட்ரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த படத்தின் கேமரா மேன் விஜய் கார்த்திக் கண்ணன், ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை ஒரு சீனிலிருந்து தூக்கிவிட்டோம். அதை கவனித்த ரஜினி அடுத்த சீனில் அவரை என்னருகில் நிற்க வையுங்கள். அவரது தோளில் கை போட்டுக்கொண்டு நான் நிற்கின்றேன். ஏனெனில் என்னுடன் நடிக்கிறேன் என வீட்டில் எல்லாம் சொல்லிவிட்டு வந்திருப்பார். இப்போது அது நடக்காமல் போனால் ஏமாந்து விடுவார் எனக் கூறியதாக குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X