Vijay - அம்மானா சும்மா இல்லடா.. ரஜினியை ஃபாலோ செய்த விஜய்.. அம்மாவின் கோரிக்கையை ஏற்று மாற்றிக்கொண்ட தளபதி
சென்னை: தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் (Vijay) தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது மும்முரமாக நடந்துவருகிறார். இந்த சூழலில் தாயின் கோரிக்கையை அவர் ஏற்றது குறித்து பார்க்கலாம்.
இந்திய அளவில் அடையாளம் காணப்பட்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தனது தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் அவர் அடி எடுத்து வைத்தாலும் பல அடிகளை வாங்கியவர். குறிப்பாக உருவ கேலியை ரொம்பவே சந்தித்தவர். ஆனால் யார் எல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது விஜய்யின் அழகையும், நடிப்பையும் பார்த்து மிரண்டு போய் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதிக வியாபாரம்: விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே வியாபாரம் நன்றாக நடக்கும் என்ற பேச்சு இருக்கும். அவரது நடிப்பில் கடைசியாக பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தன. ஆனால் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக அந்தப் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களே சொல்லியிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் திரைத்துறையினரிடத்திலும் அதே நினைப்புதான் இருக்கிறது.
உச்ச சம்பளம்: விஜய் மிகப்பெரிய வியாபாரத்தை கொண்டிருப்பதால் அவரது சம்பளமும் தாறுமாறாக ஏறியிருக்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. அதாவது தற்போது ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் அவர் நடித்துவரும் தளபதி 68 படத்துக்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்கிறார் என்பது நிதர்சனம்.
தளபதி 68: தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். சென்னையில் பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் நடந்தது. அதனையடுத்து இப்போது துருக்கியில் நடந்துவருகிறது. பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, வைபவ, பிரேம் ஜி அமரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாய் பாசம்: விஜய் இப்போது வேண்டுமானால் தனது தந்தையுடன் சிறிது மனஸ்தாபத்தில் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவரது தாயும், தந்தையும்தான் எல்லாமே என்று அவரை முழுதாக அறிந்தவர்களுக்கு புரியும். இந்த சூழலில் தனது தாய் ஷோபா சந்திரசேகர் வைத்த கோரிக்கைக்காக விஜய் ஒரு விஷயத்தை மாற்றிக்கொண்டார் என்ற விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன நடந்தது?: அதாவது கமர்ஷியல் ஹீரோவாக ராஜபாட்டை நடத்தும் விஜய் ஆரம்பத்தில் வெரைட்டியாக நடிக்க ஆசைப்பட்டவர். அதிலும் நெகட்டிவ் ஷேடில் நடிக்க ஆசைப்பட்டாராம். ரஜினிகாந்த் சில படங்களில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்ததால் வந்த ஆசைதான் அது. அதையே ஃபாலோ செய்து ப்ரியமுடன் உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பார் விஜய்.
வேண்டாம் விஜய்: இதனை பார்த்த விஜய்யின் ஷோபா சந்திரசேகர் விஜய்யிடம் நெகட்டிவ் ரோல் வேண்டாமே என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் விஜய்க்கோ நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டும் என ரொம்பவே ப்ரியம். மேலும் ப்ரியமுடன் உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன. இருந்தாலும் தாயின் கோரிக்கையை நிராகரிக்க மனம் இல்லாமல் சரி இனி நெகட்டிவ் ஷேட் கலந்த ரோலில் நடிக்கமாட்டேன் என சொல்லி அதிலிருந்து நடிக்கவே இல்லையாம். இந்தத் தகவலை விஜய்யே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பேட்டிதான் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ச்ச தளபதிக்கு அம்மா மேல எவ்வளவு பாசம் என நெகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











