Vijay Antony Daughter - அப்பாவுக்கு ஒன்னும் இல்ல.. தைரியம் சொன்ன விஜய் ஆண்டனி மகளுக்கா இப்படி?
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) பெரும் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து அவரது மனைவிக்கு மீராதான் தைரியம் சொல்லியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றார்.

விஜய் ஆண்டனிக்கு நேர்ந்த துயரம்: விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள்.அவர்களில் ஒருவர் மீரா. மூத்தவரான மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் அவர் நேற்று அதிகாலை தூக்கு போட்டு உயிரிழந்தார்.
அடக்கம் செய்யப்பட்ட உடல்: இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனியின் வீட்டில் வைக்கப்பட்டது. நேற்றே உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில் இன்று அவரது உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் இடத்துக்கான அனுமதி கிடைக்க ஏற்பட்ட கால தாமதம்தான் இன்று அடக்கம் செய்ததற்கான காரணமாக கூறப்பட்டது.
மீராவின் உயிரிழப்பு விஜய் ஆண்டனியின் குடும்பத்தை மட்டுமின்றி 16 வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோரையும் சோகமடைய செய்துள்ளது. எதுவாக இருந்தாலும் தற்கொலை தீர்வல்ல என்று காலங்காலமாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறு வயதில் இதுமாதிரியான விபரீத முடிவை குழந்தைகள் எடுக்காமல் இருக்க பெற்றோர்களின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் இது உணர்த்தியிருக்கிறது.
மீராவின் மறுபக்கம்: சூழல் இப்படி இருக்க மீராவுக்கு மன உளைச்சல் அதனால்தான் இந்த முடிவு எடுத்தார் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் மன உளைச்சலில் இப்படி செய்யக்கூடியவர் மீரா இல்லை என்பதுதான் அவரது தோழிகள் மற்றும் தோழிகளின் பெற்றோரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் பெரும் விபத்தை சந்தித்தபோது தனது தாய் பாத்திமாவுக்கு முழுக்க தைரியம் சொன்னது மீராதான் என்று தெரியவந்திருக்கிறது.
அதாவது விஜய் ஆண்டனிக்கு அந்த விபத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட முகமே சிதைந்துபோகும் அளவுக்கு காயங்கள். இதனால் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். என்ன ஆகுமோ என்று உச்சக்கட்ட சோகத்தில் இருந்திருக்கிறார். ஆனால் மீராவோ தனது தாயிடம் சென்று,
அப்பாவுக்கு ஒன்னும் இல்லை அம்மா. மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டேன். ஒன்றும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்' என தைரியம் கூறி தனது அம்மாவை தேற்றினாராம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படிப்பட்ட பெண்ணா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று சோகமடைந்து அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











