Pa.Ranjith - ஏன் காலுல விழுற.. அறிவில்ல உனக்கு - கொந்தளித்த இயக்குநர் பா.இரஞ்சித்.. வீடியோ இதோ

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கையில் காலில் விழுந்தார்.

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படமானது ரசிகர்களை ஏமாற்றவில்லை என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது. நெல்சன் திலீப்குமாரின் மேக்கிங்கும், ரஜினிகாந்த்தின் ஆக்டிங்கும் இணைந்து படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிட்டதாக பலர் கூறுகின்றனர்.

 Here is the video of Pa.Ranjith spoke against falling on the feet of others

வசூல் எவ்வளவு: படம் வெளியாகி ஒரே வாரத்தில் விக்ரம் படம் செய்த 410 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை அடித்து நொறுக்கிவிட்டதாக பலரும் கூறினர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலோ 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என சன் பிக்சர்ஸ் குறிப்பிட்டு அதோடு நிறுத்திக்கொண்டது. இருந்தாலும் இந்த வசூலே தங்களுக்கு நிம்மதிதான் என ஜெயிலரை ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இமயமலை பயணம்: சூழல் இப்படி இருக்க படம் வெளியாகும் முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு சென்ற அவர் கிட்டத்தட்ட ஒருவார காலம் அங்கிருந்து ஆன்மீக தலங்களில் வழிபாடு செய்து, பாபா ஜி குகையில் தியானமும் செய்தார். அந்தப் பயணத்தை முடித்த ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார். அடுத்ததாக அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலுக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை: ரஜினிகாந்த்தின் சந்திப்புகளில் யோகி ஆதித்யநாத்துடனான சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சந்திப்பின்போது யோகியின் காலில் ரஜினி விழுந்ததை 99 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் ரசிக்கவில்லை. அதனை கண்டித்தும், கிண்டலடித்தும் சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

மேலும், கடவுள், அப்பா, அம்மா காலில் மட்டும்தான் விழ வேண்டும் என எதற்காக ரஜினிகாந்த் சொன்னார் என கேள்வி எழுப்பும் அவர்கள், காலா படத்தின் ஒரு காட்சியையும் ட்ரெண்டாக்கினர். அதாவது படத்தின் ஒரு காட்சியில், நானா படேகர் தனது பேத்தியிடம் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்வார். அதற்கு ரஜினியோ அதெல்லாம் வேண்டாம். நமஸ்தே சொல் போதும் என்பார். இந்த வீடியோவையும் ரசிகர்கள் சுத்தலில் விட்டனர்.

பா.இரஞ்சித் வீடியோ: இந்நிலையில் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் காலில் விழுவது பற்றி ஒரு மேடையில் பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், "ஏன் அடுத்தவன் காலுல விழுற. அறிவில்ல உனக்கு. அது ஒரு அடிமைத்தனம். அதை தொடர்ந்து ஏன் செய்ற. உன் அப்பா அம்மா கால தவிர வேற எவன் காலுலயும் விழாத" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவையும், ரஜினிகாந்த் யோகி காலில் விழுந்ததையும் முடிச்சுப்போட்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X