இமைக்கா நொடிகள் படம் எப்படி இருக்கு?: இது 'விக்னேஷ் சிவன்' விமர்சனம்

By Siva

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தை பார்த்துவிட்டு விமர்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

கேடிஎம் பிரச்சனையால் படம் தமிழகத்தின் பல்வேறு இடங்கள், வெளிநாடுகளில் ரிலீஸாகவில்லை.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

படம் ரிலீஸாகவில்லை என்று நயன்தாரா, விஜய் சேதுபதி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனோ ஊருக்கு முன்பு படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதியுள்ளார். விமர்சனம் எழுதும் வேகத்தில் நயன்தாராவின் நடிப்பை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார் விக்னேஷ் சிவன்.

பிரச்சனை

இமைக்கா நொடிகள் ரிலீஸாவதில் இருக்கும் பிரச்சனை தீர்ந்து நாளை படம் வெளியாகும் என்று நம்புவதாக நேற்று இரவே ட்வீட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள ஒருவர் தான் பிரச்சனை செய்வதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சீக்கிரம் தீர்த்து படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா, ரசிகர்கள் பாவம் மரண வெயிட்டிங்.

விஜய் சேதுபதி

அருமையாக எழுதி இயக்கப்பட்டுள்ள த்ரில்லர்.

அனுராக் கஷ்யப்பின் நடிப்பு வாவ்

அதர்வாவின் சிறந்த ஆல் ரவுண்டு பெர்பாமன்ஸ். பார்க்க ஸ்மார்ட்டாக, மாச்சோவாக இருக்கிறீர்கள்

ஹிப்ஹாப் தமிழாவின் இசை சிறப்பு

விஜய் சேதுபதி மீண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அருமை என்று இமைக்கா நொடிகள் பற்றி விமர்சித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா

விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் என்ன ப்ரோ முதல் ஆளாக விமர்சனம் போட்டுவிட்டீர்கள். ஆமாம், நயன்தாராவின் நடிப்பு பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X