சூப்பர்ஸ்டாரின் தர்பார் படம் குறித்து பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

Recommended Video

Darbar Audience Celebration in Mumbai | Rajinikanth | A.R.Murugadoss

சென்னை: தர்பார் படத்தை இன்று காலை முதல் காட்சியே பார்த்த பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது தர்பார் படம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தர்பார் படம் திரைக்கு வந்துள்ளது.

தலைவர் பொங்கல்

தலைவர் பொங்கல்

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே நடித்த பேட்ட படம் ரிலீசானது. இந்த ஆண்டு பொங்கலுக்கும் ரஜினியின் தர்பார் படம் வெளியாகியுள்ளது.

சோலோ ரிலீஸ்

சோலோ ரிலீஸ்

பேட்ட படத்திற்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டு படங்களுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், இந்த ஆண்டு தர்பார் படம் சோலோ ரிலீசாக பெரிய போட்டிகள் ஏதுமின்றி வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ்

பாக்ஸ் ஆஃபிஸ்

அதனால், கடந்த ஆண்டை விட வசூல் ரீதியாக தர்பார் படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை உலகளவில் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகளவில் 7000 தியேட்டர்களில் தர்பார் படம் வெளியாகியுள்ளதால், 100 கோடி வசூலை சீக்கிரமே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

பேட்ட படத்தை போலவே ரஜினியின் தர்பார் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளன. ரஜினி ரசிகர்கள் பிரபலங்கள் படம் சூப்பராக இருக்கிறது என்று சொன்னாலும், சாதாரண ஆடியன்ஸ், முதல் பாதி சூப்பர் இரண்டாம் பாதி சொதப்பல் என்றே கூறிவருகின்றனர்.

பேட்ட இயக்குநர் விமர்சனம்

இந்நிலையில், தர்பார் படத்தை பார்த்த பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தர்பார் படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "தர்பார் படம் மரண மாஸாக இருக்கிறது. அய்யோ தலைவா.. என்னவொரு எனர்ஜி.. என்னவொரு கரிஷ்மா.. ஒவ்வொரு பிரேமிலும் தலைவரின் மேஜிக் தான். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X