இவ்வளவு நாள் வீணாகிப் போச்சே..! லாக்டவுன் நேரத்திலும் படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் டீம் இதுதான்!
ஐஸ்லாந்து: கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், லாக்டவுனில் தொடங்கப்பட்டிருக்கிறது, ஒரு ஷூட்டிங்!
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் இதன் பாதிப்பில் சிக்கியுள்ளன.
அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன.

கொரோனா
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் சில மாநிலங்களில் கட்டுக்குள் இல்லாததால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.

ஊரடங்கு
இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் திரைத்துறையினரும் வீடுகளில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

லாக்டவுன்
எப்போது கொரோனா வைரஸ் தடுக்கப்பட்டு, லாக்டவுன் நீங்கி, ஷூட்டிங் தொடங்கலாம் என பல்வேறு நாடுகளை சேர்ந்த சினிமாத்துறையினர் யோசித்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு நாடு சினிமா படப்பிடிப்புக்கு இந்த லாக்டவுன் நேரத்திலும் அனுமதி அளித்துள்ளது. அந்த நாடு ஐஸ்லாந்து. ஐரோர்ப்பாவில் உள்ள தீவு நாடான இதன் மக்கள் தொகை, 4 லட்சம்.

கூடுவதற்கு அனுமதி
இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார், 1760 பேர். இவர்களுக்கு இப்போது குணமாகிவிட்டது. கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது யாருக்கும் கொரோனா இல்லாததால், விதிக்கப்பட்டிருந்த தடைகளை மே 4 ஆம் தேதி முதல் நீக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் 20 பேர் வரை கூடுவதற்கு அனுமதி அளித்துள்ளது, அந்நாட்டு அரசு.

முதல் படப்பிடிப்பு
இதையடுத்து தனது 'கட்லா' என்ற தொடரின் படப்பிடிப்பை அங்கு தொடங்கியுள்ளது, நெட்பிளிக்ஸ். அங்குள்ள விக் (Vik) என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கி யுள்ளனர். லாக்டவுனின் தொடங்கப்பட்ட முதல் படப்பிடிப்பு இதுதான். மே 4 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுக்குழுக்கள் இந்த தொடருடன் இணையும் என்று கூறப்பட்டுள்ளது.

சயின்ஸ்பிக்சன்
ஏற்கனவே டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் சினிமா, வெப்சீரிஸ் ஷூட்டிங்கை தொடங்க அனுமதி அளித்திருந்தது. இதை புகழ்பெற்ற ஐஸ்லாந்தைச் சேர்ந்த பல்டாசர் கோர்மாகுர் (Baltasar Kormákur)என்ற இயக்குனர் இயக்குகிறார். சயின்ஸ்பிக்சன் தொடரான இது 8 பகுதிகளாக எடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











