twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவிடம் இருந்து தப்பித்தது எப்படி...வழிகாட்டும் சனக் படக்குழுவினர்

    |

    மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அதிகரிக்கும் நோய் பரவலால் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    ஆனால் இந்த சமயத்திலும் வித்யுத் ஜம்வால் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவர் மேற்கொண்டு வரும் தற்காப்பு கலைகளே இதற்கு முக்கிய காரணம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆச்சரியப்படுத்தும் வகையிலான பல ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.

    விவேக்கை நேசிக்கும் ஒவ்வொருவரும்… ஒரு மரக்கன்றாவது நட வேண்டும்… சிம்பு உருக்கமான அறிக்கை !விவேக்கை நேசிக்கும் ஒவ்வொருவரும்… ஒரு மரக்கன்றாவது நட வேண்டும்… சிம்பு உருக்கமான அறிக்கை !

    இவர் அடுத்து நடித்து வரும் படம் சனக். ருக்மினி மைத்ரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த கொரோனா பரவல் காலத்திலும் எந்த பிரச்னையும் இல்லாமல் படத்தின் வேலைகளை ஏறக்குறைய முடித்துள்ளனர் சனக் படக்குழுவினர்.

    படப்பிடிப்பை நடத்தியது எப்படி

    படப்பிடிப்பை நடத்தியது எப்படி

    கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து, எப்படி வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தினோம் என்பது பற்றி படத்தின் டைரக்டர் கனிஷ்க் வர்மா விளக்கி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், இன்னும் கோவாவில் நடத்தப்பட வேண்டிய படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. திடீரென நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பரவலால் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

    கொரோனாவிடம் இருந்து தப்பியது எப்படி

    கொரோனாவிடம் இருந்து தப்பியது எப்படி

    மிக நேர்மையாகவும், கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆரம்பம் முதலே படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படப்பிடிப்பு தளத்தில் பின்பற்றினோம். எப்போதும் இதை நாங்கள் சாதாரணமாக, அலட்சியமாக கருதவில்லை.

    ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை

    ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை

    ஜனவரி மாதம் ஃபோட்டோகிராபி பணிகள் துவங்கியது முதல் இதை கடைபிடித்து வருகிறோம். பொறுப்புடன் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து வருவதால் கடந்த 3 மாதங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் அதிர்ஷ்டகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்.

     என்னென்ன செய்தோம் தெரியுமா

    என்னென்ன செய்தோம் தெரியுமா

    படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டோம். முக்கியமாக தேவை என்பவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் இருந்தோம். எந்த சமயத்தில் 10 முதல் 15 பேருக்கு அதிகமாக யாரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது இல்லை.

    தேவையானவர்களுக்கு மட்டுமே அனுமதி

    தேவையானவர்களுக்கு மட்டுமே அனுமதி

    ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் இருந்தோம். தேவை எனும் போது மட்டும் அவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த இக்கட்டான நோய் பரவல் காலத்திலும் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர். எப்போதும் முகக்கவசம் கட்டாயம் அனைவரும் அணிந்திருந்தோம்.

    Recommended Video

    Thalapathy 65 வில்லன் இவர் தானா? புது Update | Thalapathy Vijay, Nelson Dilip
    தூய்மையில் கவனம்

    தூய்மையில் கவனம்

    எந்த ஒரு காயம், விபத்து, கொரோனா தொற்றும் இல்லாமல் 3 மாத படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒவ்வொரு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தூய்மைக்கான பொருளும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் தயார் நிலையில் வைத்திருந்தோம் என்றார்.

    English summary
    we have been lucky enough to not have a single case for three months shooting because we were quite strict with safety measures and responsible says Director Kanishk Verma.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X