விடுதலை படத்தின் முதல் விமர்சனம்... வெற்றிமாறனின் இன்னொரு தரமான செய்கை!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனின் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய் சேதுபதி, சூரி லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

 கதையின் நாயகனாக சூரி

கதையின் நாயகனாக சூரி

தனுஷ் நடித்த அசுரனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த சூரி, இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல், முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் விடுதலை படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

 முதல் விமர்சனம்

முதல் விமர்சனம்

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. எடிட்டிங், பின்னணி இசை பணிகள் முடிந்துவிட்ட பிறகு விடுதலை படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்துள்ளனர் சில பிரபலங்கள்.

 சூரியின் நடிப்பு பிரமாதம்

சூரியின் நடிப்பு பிரமாதம்

விடுதலை படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் சூரியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். சூரியின் கேரியரில் விடுதலை ஒரு மைல்கல் எனவும், குமரேசன் என்ற போலீஸ் கேரக்டராகவே அவர் வாழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல், விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டரும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். சூரி, விஜய் சேதுபதி தவிர இன்னும் பல கேரக்டர்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 மேஸ்ட்ரோ இளையராஜா

மேஸ்ட்ரோ இளையராஜா

அதேபோல் இளையராஜாவின் இசை தான் படத்தின் இன்னொரு ஹீரோ எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தனுஷ், அநன்யா பாடிய 'ஒன்னோட நடந்தா' பாடல், இளையராஜாவும் அநன்யா பட்டும் பாடிய 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல்கள் திரையில் புதிய அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் அவர்கள் பாராட்டியுள்ளனர். முக்கியமாக பின்னணி இசையில் இளையராஜா தன்னை மேஸ்ட்ரோ என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

 வெற்றிமாறனின் தரமான செய்கை

வெற்றிமாறனின் தரமான செய்கை

விடுதலை படத்தின் மேக்கிங்கில் வெற்றிமாறன் மீண்டும் அசத்தியுள்ளார். முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதால், மொத்த டீமும் உயிரை கொடுத்து உழைத்துள்ளனர் என பாராட்டியுள்ளனர். அதேபோல், ஆர் வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருப்பதாகவும் முதல் விமர்சனத்தில் தெரியவந்துள்ளது. நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் எனவும், க்ளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சி தரமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 எதிர்பார்ப்பில் இரண்டாவது பாகம்

எதிர்பார்ப்பில் இரண்டாவது பாகம்

முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இருக்கும் ட்விஸ்ட்டால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம். நிச்சயமாக விடுதலை இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சூரி, விஜய் சேதுபதி, இளையராஜா, வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளதாக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இதனால், நாளை மறுநாள் (மார்ச் 31) வெளியாகும் விடுதலை முதல் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X