வில்லன் நடிகரை பற்றி இப்படி கிளப்பிட்டாய்ங்களே... குடும்பம் மறுப்பு
திருவனந்தபுரம்: மருத்துவமனையில் சீரியசாக இருப்பதாகவும் சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்படுவதாகவும் வந்த தகவலை வில்லன் நடிகர் குடும்பம் மறுத்துள்ளது.
தமிழில், ஆண்களை நம்பாதே, கழுகுமலை கள்ளன், தர்மதுரை, தங்கபாப்பா, கர்ணா, ஏழுமலை, சந்திரமுகி, ஆதிபகவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் மலையாள நடிகர் மோகன் ராஜ்.
கீரிக்காடன் ஜோஸ் என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளம் தவிர தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
இவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சீரியசாக இருப்பதாகவும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.

கால் பிரச்னை
இந்நிலையில் நடிகரின் குடும்பம் இந்தச் செய்தியை மறுத்துள்ளது. அவருக்கு கால் பிரச்னைக்காக சென்னையில் சிகிச்சை நடந்ததாகவும் பொருளாதார உதவியை யாரிடமும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கம்
இதுபற்றி மலையாள நடிகர் சங்க செயலாளர் எடவேளா பாபு கூறும்போது, மருத்துவமனையில் இருக்கும் நடிகர் மோகன்ராஜிடம் பேசினேன். இப்போது நன்றாக இருக்கிறார். அவர் குடும்பத்தினரிடமும் பேசினேன். பயப்படும்படி ஒன்றும் இல்லை.

பொருளாதார பிரச்னை
அவர்களுக்குப் பொருளாதார பிரச்னையும் இல்லை. அவரைக் கவனித்துக்கொள்ள தயாரிப்பு நிர்வாகி பாஷா இருக்கிறார். இப்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியானத் தகவல்கள் தவறானவை . அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றார்.


Click it and Unblock the Notifications











