போயஸ் கார்டனில் தனுஷின் புது வீடு...இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா ?
சென்னை : போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் அருகிலேயே அவரது மருமகனும், நடிகருமான தனுசும் புது வீடு ஒன்றை கட்ட உள்ளார். இதன் பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
பூமி பூஜையில் ரஜினி, தனுஷ் குடும்பத்தினர்கள் கலந்து கொண்ட போட்டோக்களை சமீபத்தில் அதிக அளவில் இணையத்தில் வலம் வந்தன. ரஜினியின் வீடு அருகிலேயே தனுஷ் வீடு கட்டுவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
அதுவும் ரஜினியின் விருப்பத்தின் பேரில் தான் தனுஷ் இந்த வீடு கட்டும் பணியை துவக்கி உள்ளார். தனுஷ், வீடு கட்டுவதற்கு போயஸ் கார்டனை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் அப்படி என்ன தான் காரணம் உள்ளது என தெரியனுமா...வாங்க பார்க்கலாம்.

ஒய்வு நேரங்களில் ரஜினி செய்யும் வேலை
தனுஷ், நீண்ட காலமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பாட்மென்ட்டில் தான் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சூட்டிங் இல்லாத சமயங்களில் தனது பேரப் பிள்ளைகளான யாத்ரா, லிங்கா ஆகியோரை பள்ளியில் இருந்து ரஜினி தான் அழைத்து வருவார்.

ரஜினியை மொய்க்கும் கூட்டம்
அவர்களை விடுவதற்காக தனுஷ் வீட்டிற்குள் ரஜினி வரும் போதெல்லாம் அப்பாட்மென்டில் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் கூடி விடும். பெரிய நடிகர் என்பதால் கூட்டத்தை சமாளிப்பது பெரும்பாடாகி விடும்.

வீட்டு வேலையை துவங்கிய தனுஷ்
இதனால் மகள் ஐஸ்வர்யாவையும், மருமகன் தனுசையும் தனது வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வர ரஜினி கூறி உள்ளார். ரஜினி விருப்பப்பட்டதால் தனுசும், ரஜினி வீட்டிற்கு எதிராக உள்ள தெருவில் நிலத்தை வாங்கி வீடு கட்ட துவங்கி விட்டார்.

பிரம்மாண்ட கிரஹபிரவேசம்
தீபாவளிக்குள் வீட்டை கட்டி முடித்து, வீட்டின் கிரஹபிரவேசத்தை பிரம்மாண்டமாக நடத்த ரஜினியும், தனுஷ் குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளனர்.

பிஸியாகும் தனுஷ், ரஜினி
இதற்கிடையில் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்து அவர் நடித்த கர்ணன் படமம் ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மற்றொரு புறம் ரஜினியோ உடல்நல குறைவு காரணமாக அண்ணாத்தே படத்திற்கு சிறிது பிரேக் விட்டு, ஓய்வில் இருக்கிறார். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











