twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்ணன் படத்துக்கு டப்பிங் கொடுக்காததுக்கு இதுதான் காரணம்... வெளிப்படுத்திய லால்

    |

    சென்னை : கர்ணன் படத்தில் மலையாள இயக்குநரும் -நடிகருமான லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    Recommended Video

    OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

    யமராஜா என்ற கேரக்டரில் நடித்திருந்த அவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கவில்லை.

    மோசமான துயரம்.. கொரோனாவுக்கு இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா.. பதறும் பிரபலங்கள்! மோசமான துயரம்.. கொரோனாவுக்கு இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா.. பதறும் பிரபலங்கள்!

    இந்நிலையில் தற்போது இதற்கான காரணத்தை அவர் சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

    கவனம் பெற்ற யமராஜா கேரக்டர்

    கவனம் பெற்ற யமராஜா கேரக்டர்

    சமீபத்தில் தனுஷ், லால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான கர்ணன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்த படத்தில் அனைத்து கேரக்டர்களும் பேசப்பட்டது. முக்கியமாக தனுஷ்க்கு அடுத்தபடியாக படத்தில் லால் நடித்திருந்த யமராஜா கேரக்டர் கவனம் பெற்றுள்ளது.

    ரசிகர்கள் கேள்வி

    ரசிகர்கள் கேள்வி

    தனுஷின் நலம்விரும்பியாக வரும் யமராஜா படத்தில் வயதான பெண்ணிடம் பணத்தை திருட முயற்சிப்பது போல வரும் இந்த கேரக்டர் படத்தில் முக்கியமானது. ஆனால் முக்கியமான இந்த கேரக்டருக்கு மலையாள நடிகரும் இயக்குநருமான லால் டப்பிங் கொடுக்கவில்லை. இது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.

    லால் வெளிப்படை

    லால் வெளிப்படை

    இந்நிலையில் இந்த கேரக்டருக்கு தான் ஏன் டப்பிங் கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை லால் தற்போது தனது சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட இந்த படத்திற்காக தான் டப்பிங் கொடுக்க சென்னை வந்ததாகவும் ஆனால், அந்த வழக்குமொழியை பேச தனக்கு கடினமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    டப்பிங் செய்யவில்லை

    டப்பிங் செய்யவில்லை

    கேரளாவிலும் திரிச்சூர் பகுதி வழக்கை பேசுவது கடினமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே யமராஜா என்ற அந்த கேரக்டரை 100 சதவிகிதம் சிறப்பாக கொண்டுவர தான் விரும்பியதாகவும் அதனால்தான் தான் டப்பிங் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

    டைரக்டரிடம் கோரிக்கை

    டைரக்டரிடம் கோரிக்கை

    படத்தின் முக்கியமான மற்ற கேரக்டர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த மொழியை பேசுவது சுலபமாக இருந்ததாகவும் அவர் குறிபிபட்டுள்ளார். தான் பேசினால் அந்த கேரக்டரின் தன்மை மாற வாய்ப்புள்ளதால் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் வேறு ஒருவரை கொண்டு டப்பிங் செய்ய தான் கேட்டுக் கொண்டதாகவும் லால் தெரிவித்துள்ளார்.

    English summary
    At my request, that the voice of a Tirunelveli native was used -Lal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X