Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி 66 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா...முழு விபரம் இதோ
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது தளபதி 66 டீம். இதனால் அடுத்த அப்டேட் என்ன, எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் கட்ட ஷுட்டிங்கில் குட்டியாக ஒரு பாடல் மட்டும் சென்னையில் எடுத்து விட்டு தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர்.
பிறந்த
நாள்
அதுவுமா…
கமல்
கொடுத்த
சர்ப்ரைஸ்..
மகிழ்ச்சியில்
சாய்
பல்லவி
!

யாரெல்லாம் நடிக்கிறார்கள்
ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் கடந்த ஒரு வாரமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார், அண்ணன்களில் ஒருவராக ஷாம் நடிக்கிறார் என்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பிறகு இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அட இவங்களும் இருக்காங்களா
இந்நிலையில் தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்டை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ். இதன் படி நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோர் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புள் வெளியிடப்பட உள்ளதாம்.

ஹைலைட்டே இது தான்
தளபதி 66 படத்திற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, அதில் தளபதி 66 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. தளபதி 66 படத்தின் மூலம் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் அனைவரையும் சந்திக்க உள்ளதாக கூறி தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் செய்துள்ளார்.

அடுத்த அப்டேட் என்ன
நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருவதால் அடுத்து என்ன அப்டேட் வரும், எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிருக்கிறார்கள். லேட்டஸ்ட் தகவலின் படி, அடுத்து வரப் போகும் அப்டேட் தளபதி 66 படத்தின் டைட்டில் தானாம். விரைவில் தளபதி 66 படத்தின் மோஷன் போஸ்டருடன் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
Recommended Video

இது செம தகவலாக இருக்கே
தளபதி 66 படத்திற்கு இசையமைக்கும் வேலைகளை பெரும்பாலும் முடித்து விட்டாராம் தமான். இந்த படத்திலும் விஜய் சொந்தக்குரலில் பாடி, ஆடும் பட்டையை கிளப்பும் மாஸ் பாடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் பிறந்தநாளன்று தான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், அதற்கு முன் மோஷன் போஸ்டரை வெளியிடலாமா என்பது பற்றி படக்குழு சிந்தித்து வருகிறதாம்.