யார் இந்த அன்புச் செழியன்?...அடிக்கடி ரெய்டில் சிக்கும் இவரின் உண்மை முகம் என்ன?

சென்னை : கோலிவுட்டிலும் சரி, மதுரையிலும் சரி பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு பிரபலமானவர் அன்புச் செழியன். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அன்புச் செழியன் பெயரை தெரியாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு பிரபலமாகி விட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து பல பல சிக்கல்களில் சிக்கி வருகிறார் அன்புச் செழியன்.தற்போது மீண்டும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. அன்புச் செழியன் மட்டுமின்றி கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி ரெய்டு விவகாரத்தில் சிக்கும் இந்த அன்புச் செழியன் யார்? இவரது பேக்கிரவுண்ட் என்ன? என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இவரை பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

யார் இந்த அன்புச்செழியன்

யார் இந்த அன்புச்செழியன்

சினிமாவில் பைனான்சியர் என்பதால் அன்புச்செழியனை பலரும் பரம்பரை பணக்காரர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தான் இவரின் சொந்த ஊர். பள்ளி தலைமை ஆசிரியரின் மகனான அன்புச் செழியன், ஆரம்பத்தில் சிறிதாக தெருக்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

சினிமா பைனான்சியர்

சினிமா பைனான்சியர்

பிறகு சென்னைக்கு வந்து படிப்படியாக வளர்ந்த அவர், சிறிய பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழிலை துவக்கினார். அதிகமாக டப்பிங் பட டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கே இவர் உதவினார். தனது தொழிலை விரிவுபடுத்த கோபுரம் சினிமாஸ் நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரிக்க துவக்கினார். மதுரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரையும் துவக்கினார்.

இவர் பிரபலமானது எப்பது?

இவர் பிரபலமானது எப்பது?

சினிமா பைனான்சியராக இருந்த அன்புச் செழியனின் பெயரை சொன்னாலே தெரியும் அளவிற்கு அவரை பிரபலமாக்கிய விவகாரம், 2017 ல் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தான் அன்புச்செழியனை அனைவருக்கும் தெரிந்த நபராக மாற்றியது. அன்புச் செழியன், கூடுதல் வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தான் தற்கொலை செய்து செய்து கொண்டதாக அசோக் குமார் கடைசியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாக சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்ட அன்புச்செழியன்

கைது செய்யப்பட்ட அன்புச்செழியன்

தயாரிப்பாளர் அசோக் குமார், ஜிவி என அடுத்தடுத்த பிரபலங்களின் தற்கொலைக்கு காரணம் அன்புச்செழியன் கொடுத்த நெருக்கடி தான் என சொல்லப்படுகிறது. டைரக்டரும் நடிகருமான சசிக்குமாரின் உறவினரான அசோக் குமாரின் தற்கொலை விவகாரத்தில் அன்புச் செழியன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சினிமாத்துறையில் கந்துவட்டி அதிகரித்து வருவது தான் தயாரிப்பாளர்களின் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டது.

மோசமானவரா அன்புச்செழியன்

மோசமானவரா அன்புச்செழியன்

வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது, ஆண்டவன் கட்டளை என்ற 4 படங்களை மட்டுமே அன்புச் செழியன் தயாரித்துள்ளார். பல படங்களை விநியோகம் செய்துள்ளார்.சிறிய தயாரிப்பாளர் தான். எதுவுமே இல்லாமல் சினிமாவிற்கு வந்த பலர் அவரால் ஆளாகி உள்ளனர். அன்புச்செழியன் உண்மையிலேயே மோசமானவர் என்றால் திரையுலகில் அவருக்கு இவ்வளவு மதிப்பு வந்திருக்காது. ஜிவி விவகாரம் எழுந்த போதே பலரும் அன்புச் செழியனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பார்கள்.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அன்புச் செழியனுக்கு விஐபி.,க்கள் அனைவரும் நட்புடன் உள்ளனர்.

ரெய்டில் சிக்கும் அன்புச் செழியன்

ரெய்டில் சிக்கும் அன்புச் செழியன்

அதற்கு பிறகு 2020 ல் பிகில் பட விவகாரத்தில் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட போதும் அன்புச் செழியனும் ரெய்டில் சிக்கினார். இதற்கு பிறகு அன்புச் செழியன் பற்றிய தகவல்கள் அனைத்துமே கவனிக்கப்படுவதானது. தற்போது மீண்டும் ரெய்டில் சிக்கி உள்ளார். ஆனால் இந்த முறை என்ன விவகாரம் எதற்காக வருமான வரித்துறை ரெய்டு என்று புரியாமல் கோலிவுட்டே குழம்பிப் போய் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X