தமிழில் அடுத்து ரிலீசாக போகும் படங்கள் இவைகள் தான்...ரசிகர்களே ரெடியா?
சென்னை : 2022ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களான ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை, பீஸ்ட், கேஜிஎஃப் 2 என வரிசையாக அனைத்து படங்களும் ரிலீசாகி வருகின்றன.
பெரிய பட்ஜெட் படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு கூட்டம் வந்தால் தான் தங்கள் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் வருவார்கள் என சிவகார்த்திகேயனே சினிமா விழா ஒன்றில் கூறி இருந்தார். அப்படி பார்த்தால் இதுவரை வெளியான பெரிய படங்கள் அனைத்துமே போட்டி போட்டிக் கொண்டு கோடிகளில் வசூலை குவித்து வருகின்றன.

போதை பொருள் கடத்தும் பெண்ணாக
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவின் திரை வாழ்க்கையில் மிக வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் கோலமாவு கோகிலா 2018ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடித்திருப்பார். நடிகை நயன்தாரா முதல் முறையாக போதை பொருள் கடத்தும் பெண்ணாக இந்த படத்தில் நடித்திருப்பார் மேலும் யோகி பாபு காமெடி இந்த படத்தில் பட்டையை கிளப்பியது அதுமட்டுமல்லாமல் அனிருத்தின் இசையில் பாடல்களும் மிகப் பெரிய பக்கபலமாக அமைந்தது. கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
ஏப்ரல் 28
காத்துவாக்குல ரெண்டு காதல்
ஹாஸ்டல்
மகா
ஐங்கரன்
ஜனகனமன
ஏப்ரல் 29
அமைச்சர்
மே 13
டான்
மே 20
மாமனிதன்
நெஞ்சுக்கு நீதி
மே 27
கோப்ரா
ஜுன் 3
விக்ரம்
ஜுன் 17
யானை
வீட்ல விசேஷம்

டான் ரிலீஸ் தேதி மாறுகிறதா
இதில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் கிட்டதட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு ரிலீசாக உள்ளது. சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 13 ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே மே 5ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்த பட்டியலில் இன்னும் சில படங்களும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர மேலும் பல சிறிய பட்ஜெட் படங்களும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. ஒடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்பட்ட பல படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் பல நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாவதும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி ரிலீஸ் படங்கள்
தீபாவளிக்கு விஜய்யின் தளபதி 66, அஜித்தின் ஏகே 61, சூர்யா 41, சிம்புவின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, போன்ற பல பெரிய நடிகர்களின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரிலீசாகும் என்பதால் அதற்கு முன் தியேட்டர்களை பிடித்து, தங்களின் படங்களை ரிலீஸ் செய்து விட வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிக முனைப்புடன் காணப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











