நாங்க போட்டுட்டோம்..அப்போ நீங்க.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோலிவுட் பிரபலங்கள் அட்வைஸ்

சென்னை : நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இது துவங்கியது முதல் பிரபலங்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர்.

தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை சமூக வலைதளங்களில் போட்டோவுடன் பதிவிட்டு வரும் பிரபலங்கள், மற்றவர்களையும் அரசு வழிகாட்டுதலின் படி கண்டிப்பாக போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

Here the list of Kollywood celebrities who got vaccinated for covid 19

அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து கோலிவுட்டை சேர்ந்த பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பக்க நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பிரபலங்கள் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளனர்.

கோலிவுட்டை சேர்ந்த கமல், ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், ஸ்ரீபிரியா, எஸ்.பி.பி.சரண், லதா, சாருஹாசன், அவரது மனைவி கோமளம் சாருஹாசன், டைரக்டர் செல்வராகவன் ஆகியோர் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இவர்களைத் தொடர்ந்து, இன்று நடிகை கவுதமியும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதை வீடியோவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவுதமி, நர்ஸ்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மற்றவர்களும் போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X