Year Ender 2023.. ரஜினி முதல் விஷால் வரை.. தரமாக கம்பேக் கொடுத்த ஹீரோக்கள் லிஸ்ட் இதோ
சென்னை: 2023ஆம் ஆண்டு தரமான கம்பேக் கொடுத்த ஹீரோக்கள் குறித்த லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.
கோலிவுட்டில் 2023ஆம் ஆண்டு ஏராளமான படங்கள் வெளியாகின. கமல் ஹாசன், சூர்யா ஆகியோரின் படங்கள் வராவிட்டாலும் ரஜினிகாந்த், அஜித், விஜய், விஷால் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகின. அவற்றில் விஜய் படங்கள் தவிர்த்து மற்ற ஹீரோக்களுக்கு கம்பேக்காகவே இந்த வருடம் அமைந்தது. அதுகுறித்து இதில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் பல வருடங்களாக அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார், சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்து சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆட்டம் காண்பித்தன. சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை அள்ளியது. ரஜினிகாந்த்துக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி பிஎம்டபிள்யூ காரை கொடுத்து மகிழ்ந்தார். இந்த வருடம் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்தது.
அஜித்: ஹெச்.வினோத் அஜித்துடன் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மூன்றாவது முறையாக மீண்டும் அவர்கள் இணைந்து துணிவுடன் களமிறங்கினர். வங்கி கொள்ளையையும் வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் மையமாக வைத்து உருவாகியிருந்த படம் வசூல் வேட்டை நடத்தியது. குறிப்பாக போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தை அடித்து துவம்சம் செய்தது. இதன் காரணமாக அஜித்துக்கும் இந்த வருடம் தரமான கம்பேக் வருடமாக அமைந்தது.
விஷால்: செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்தார். அவரிடமே சென்று உங்களது கடைசி ஹிட் படம் எது என்று கேட்டால் அவருக்கே நியாபகம் இல்லாத நிலையில்தான் அவர் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மார்க் ஆண்டனி படத்தில் இணைந்தார். டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக 100 கோடி ரூபாயை வசூலித்து விஷாலின் கரியரில் முதல் 100 கோடி ரூபாய் படம் என்ற பெருமையை பெற்றது.
சிவகார்த்திகேயன்: டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்தது. எனவே சிவகார்த்திகேயனின் கிராஃப் சரசரவென்று ஏறியது. ஆனால் அப்படி ஏறிய கிராஃப் பிரின்ஸ் படத்தின் மூலம் அதளபாதாளத்துக்கு சென்றது. அவரது கரியரில் இல்லாத அளவு படம் படுதோல்வியை சந்தித்தது. நிலைமை இப்படி இருக்க மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார். ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருந்த மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் கம்பேக் படமாக அமைந்தது.
சித்தார்த்: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகராக அறிமுகமான சித்தார்த்துக்கு ஒரு பெரிய ஹிட் இத்தனை வருடங்களாக அமையவில்லை. திறமையான நடிகராக இருந்தாலும் ஒரு ஹிட் கிடைக்காததால் அவர் அந்த ஹிட்டுக்காக வெறித்தனமாக உழைத்துக்கொண்டே இருந்தார். அந்த உழைப்புக்கு பலனாக அமைந்ததுதான் சித்தா.
அருண்குமார் இயக்கத்தில் உருவான படத்தில் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பேசப்பட்டிருந்தது. சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா ரெஸ்பான்ஸை பெற்று சித்தார்த்துக்கு சூப்பர் கம்பேக்காக அமைந்தது. மேற்கூறியவர்களுக்கு 2024ஆம் ஆண்டும் படங்கள் வெளியாகவிருக்கின்றன. 2023 போலவே அடுத்த வருடமும் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications











