»   »  இனி நான் பிக் பாஸ் பற்றி வாய் திறக்கவே மாட்டேன்: ஆர்த்தி முடிவு

இனி நான் பிக் பாஸ் பற்றி வாய் திறக்கவே மாட்டேன்: ஆர்த்தி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இனி கருத்து தெரிவிக்கப் போவது இல்லை என்று நடிகை ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நடிகை ஆர்த்தி அது குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அக்கா, ஜூலியை பற்றி நீங்க சொன்னதை கேட்காமல் போயிட்டோமே என்று பலர் ஃபீல் செய்கிறார்கள்.

இந்நிலையில் ஆர்த்தி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

பிக் பாஸ்

இனி பிக் பாஸ் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். ஏனென்றால் பல யூடியூப் சேனல்கள் என் கமெண்ட்டுகளை நான் அவர்களிடம் சொன்னது போன்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அமைதியாக இருக்கப் போகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்த்தி.

அதே அதே

ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இப்படி வாய் கொடுத்து தான் வெளியே வந்தீங்க என்று கூற அவரோ அதே அதே என்று பதில் அளித்துள்ளார்.

யூடியூப்

யூடியூப்காரன் உங்க கமெண்ட்டை ரீப்ளே பண்ணா என்ன என்று கேட்டவருக்கு ஆர்த்தி அளித்துள்ள பதில், ரீப்ளே பண்ணா ஓகே தப்பா இந்தி பிபி புகைப்படங்களை போட்டு ஆரவ், ஓவியா புகைப்படம்னு நான் போஸ்ட் போட்டதா சொல்றான் என்றார்.

ப்ரோ

1/2 ஜூலியுடன் மோதல் ! உண்மை தற்போது வெளிச்சம்
நீர் உண்மைக்கு எதிராக நிற்கவில்லை !
ஆனால் ஒருமுறை பொய்யுடன் கைகோர்த்து விட்டாய் ! பரணி என்று ட்விட்டரில் கூறியவரிடம் அவங்க குரூப்பில் இருந்திருந்தால் நாமினேட் ஆயிருக்க மாட்டேன் ப்ரோ என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.

English summary
Actress Harathi tweeted that, 'Hereafter nothing regarding my views on BB..Bcoz many YouTube channels use my comments as if I told them-bad😈 so let me be silent viewer.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X