நிற்கக்கூட நேரமில்லை.. யோகிபாபு கைவசம் எத்தனை படங்கள் இருக்குனு தெரியுமா?
சென்னை: (Yogi babu)நடிகர் யோகிபாபு நிற்கக்கூட நேரமில்லாமல் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படுபிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பல கதாபாத்திரத்தில் பிசியாக நடித்து வருகிறார் யோகி பாபு.

இவர் படத்தில் இருந்தாலே படம் ஓடிவிடும் என்று இயக்குநர்கள் நினைப்பதால், அனைத்துப் படங்களிலும் யோகிபாபு கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகர் யோகிபாபு: குண்டான தோற்றம்.. பரட்டை தலைமுடி... இவருக்கு எல்லாம் யார் சேன்ஸ் கொடுப்பா என்று விமர்சித்தவர்களுக்கு மத்தியில். தன்னைத்தானே கேலி செய்து, விமர்சித்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்து, அந்த மைனசை பிளஸ்ஸாக மாற்றினார் யோகிபாபு. இதெல்லாம் என்ன மூஞ்சு என்று சொன்னவர்கள் இன்று இந்த முகத்தைப் பார்த்துதான் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்.
ஹீரோவாக: நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த யோகிபாபுவை, கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாக்கிய பெருமை நெல்சன் அவர்களையே சேரும். அந்த படத்தைத் தொடர்ந்து மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, பொம்மை நாயகி, யானை முகத்தான், இரும்பன் என சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஜெயிலர் படத்தில்: கதாநாயகனாக நடித்துவிட்டேன் இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். தற்போது வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க யோகி பாபுவுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைவசம் உள்ள படம்: யோகி பாபு நடித்தாலே அந்த படம் வெற்றிதான் என்கிற மனநிலையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களும் இருப்பதால், இவரை தேடித் தேடி படவாய்ப்பு வருகிறது. லக்கி மேன், ஜவான், கருமேகங்கள் கலைகின்றன, அயலான், கங்குவா, அந்தகன், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள், வானவன் என பலத் திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். மேலும், தமிழ் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த யோகிபாபு குருவாயூர் அம்பலநடையில் என்கிற மலையாளப்படத்திலும் கமிட்டாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











