எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு!
Recommended Video
சென்னை: ஹீரோ படத்தின் பாடல் வரிகள் ஏதோ பாடலுக்காக எழுத பட்ட வரிகள் போல தெரியவில்லை, எனது வாழ்விற்கான வரிகள் போல இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் கூறினார். நல்ல பாடலை தந்த பா.விஜய்க்கு நன்றி என்று கூறினார்.
நம்ம வீட்டுப்பிள்ளை வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டீசர் முன்பே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது.

இதில்,பேசிய சிவகார்த்திகேயன், இயக்குனர் பி.எஸ்.மித்ரனை பத்து வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும் , ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மூலம் அவர் எனக்கு நண்பரானார். இந்த படத்தில் மித்ரன் மற்றும் ஜார்ஜூ உடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.

இந்த படத்திற்கு பா.விஜய் அவர்கள் பாடல் எழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, ஹீரோ படத்தின் பாடல் வரியை பற்றி கூறிய சிவகார்த்திகேயன், இந்த வரிகள் ஏதோ பாடலுக்காக எழுதப்பட்ட வரிகள் போல் எனக்கு தெரியவில்லை எனது வாழ்விற்கான வரிகள் போல் இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் பேசிய அவர், ஆக்சன் கிங் அர்ஜீன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர், அவரின் ஜெய்ஹிந்த் படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது அந்த அளவுக்கு அவரை எனக்கு மிகவும், இப்போ நான் அவரோடுடன் இணைந்து நடிச்சி இருக்கேன் என்கிற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சிவகார்த்தியேன் கூறினார்.
இரும்புதிரை படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர்20 வெளியாக உள்ளது. வேலைக்காரன் படத்தைப் போல இந்தப்படமும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











