twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு

    |

    சென்னை : சென்சார் போர்ட்டுக்கு பயப்படாத ஒரு இயக்குனர் யாருனா அது நம்ம இயக்குனர் மித்ரன் தான் என்று கூறிய ரோபோ சங்கர். சென்சார் போர்டுதான் படத்துக்கு டஃப் கொடுக்கும் ஆனால், சென்சார் போர்ட்டுக்கே டஃப் கொடுத்த ஒரே இயக்குனர் இவர் தான் என்று கூறினார்.

    ஹீரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைப்பெற்றது. இதில் பேசிய ரோபோ சங்கர், தயாரிப்பாளர் கோட்டாப்பாடி ஜே ராஜேஷ் பற்றி சொல்லனும்னா அவர் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர், அதற்கு உதாரணமா சொல்லனும்னா, வழக்கமா எல்லாத் தயாரிப்பாளர்களும் சம்பளத்தை ஆரம்பத்தில் பாதி, முடிவில் என பிரித்துத்தான் தருவாங்க. ஆனால் இந்த தயாரிப்பாளர் எனக்கு படம் ஆரம்பிக்கும் இரு மாதங்களுக்கு முன்பே முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார். இப்படி ஒரு தயாரிப்பாளரை நான் எங்குமே பார்த்ததே இல்லை என்று ரோபோ சங்கர் கூறினார்.

     ‘Hero’ audio launch robo shankar speech

    மேலும் பேசிய அவர், இயக்குனர் பி.எஸ்.மித்ரனை இரும்புதிரை படத்தில் நடித்ததின் மூலமே எனக்குத் தெரியும். அவர் சென்சாருக்கு பயப்படாத ஒரு இயக்குனர், இரும்புதிரை சென்சாரின் போது அந்த சீன் கட் பண்ணுங்க, இந்த சீன் கட் பண்ணுங்க என்று சொல்லும்போதெல்லாம் அதற்கான ஆதாரங்களை மெனக்கெட்டு எடுத்து சென்று சண்டை போட்டு, 2 மணி முதல் 7 மணி வரை போராடி படத்திற்கு எந்த கட்டும் இன்றி படத்தை தணிக்கை குழுவிடமிருந்து யூ சான்றிதழை வாங்கினார். பொதுவா சென்சார் போர்டுதான் படத்துக்கு டஃப் கொடுக்கும் ஆனால், சென்சார் போர்ட்டுக்கே டஃப் கொடுத்த ஒரே இயக்குனர் இவர் தான் என்று நகைக்சுவையுடன் குறிப்பிட்டார்.

    சிவகார்த்திகேயனை பற்றி பேசிய ரோபோ சங்கர், ஆரம்ப காலத்திலிருந்து இதுவரை நான் எப்படி பார்த்தேனோ அப்படி தான் இன்னமும் இருக்கிறான் என் தம்பி என்று கூறினார். இப்படம் நிச்சயம் வெற்றி அடையும், சிவகார்த்திகேயனுக்கு இது மிக பெரிய வெற்றி படமாக அமைய வாழ்த்துகிறேன் என்று ரோபோ சங்கர் கூறினார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபைய் தியோல், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 வெளியாக உள்ளது.

    English summary
    ‘Hero’ audio launch robo shankar speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X