கமல் பிறந்தநாளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.. இன்னிக்கே வரான் மால்டோ கித்தாப்புலே!
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள மால்டோ கித்தாப்புலே பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கே பாடல் ரிலீசாகிறது என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹீரோ.
யுவன் சங்கர் ராஜா இசையில் ஹீரோ படத்தில் உருவாகியுள்ள 'மால்டோ கித்தாப்புலே' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீசாகிறது.

முன்னதாக நவம்பர் 7ம் தேதி பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையே ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும், நாளை ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டரும் ரிலீசாகவுள்ள நிலையில், எந்த டிஸ்டர்பும் இல்லாமல், மால்டோ கித்தாப்புலே பாடலை இன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் பி.எஸ். மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏரியா தவுலத்து, கெத்தான ஆளு, ஸ்வாக், மரண மாஸா பட்டைய கிளப்புறவன் போன்ற அர்த்தங்களை குறிக்கும் மால்டோ கித்தாப்புலே பாடலுக்காக கடந்த சில தினங்களாக காத்துக் கிடக்கும் சிவகார்த்திகேயன் புள்ளிங்களுக்கு இன்று மாலையே செம்ம ட்ரீட் காத்திருப்பதால், இப்போதே குஷியாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











