"கோடீஸ்வரி என்பதால் என் மகளுக்கு லவ் டார்ச்சர் தர்றார்".. ஹீரோ மீது புகார் சொல்லும் ஹீரோயின் அம்மா!
மயூரன் ஹீரோ மீது லவ் டார்ச்சர் புகார் சொல்கிறாராம் ஹீரோயினின் அம்மா.
சென்னை: கோடீஸ்வரி என்பதால் தன் மகளுக்கு லவ் டார்ச்சர் தருவதாக ஹீரோ மீது ஹீரோயினின் தாயார் புகார் கூறியிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நந்தன் சுப்பராயன். இவர் தற்போது மயூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அமுதவாணன், ஆனந்த்சாமி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாயகியாக மிஸ் இந்தியா (பெமினா) பட்டம் பெற்ற அஸ்மிதா நடித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதனால் பட புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

புரொமோஷன்:
ஆனால், படத்தின் நாயகன் மற்றும் நாயகி இருவருமே புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதில்லையாம். காரணம் காதல் பிரச்சினை என்று கூறப்படுகிறது. ஹீரோ வருவதாக இருந்தால் ஹீரோயினான தன் மகளை அனுப்ப முடியாது என கறாராக கூறி விட்டாராம் நாயகியின் அம்மா.

ஹீரோ டார்ச்சர்:
அதோடு, "தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள்" என தயாரிப்பு தரப்பிடம் சொல்லி விட்டாராம் அவர்.

ஹீரோ பதிலடி:
இதைக் கேள்விப்பட்ட ஹீரோ, ‘கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும்?' என பதில் கேள்வி எழுப்புகிறாராம். இதனால் தயாரிப்பு தரப்பு தான் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம். நாயகன், நாயகி என இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என தவியாய் தவித்து வருகிறார்களாம்.

இயக்குநர் கவலை:
ஜோதிகாவின் ஜாக்பாட், கழுகு 2 என மிகப் பெரிய படங்களுடன் ரிலீசாகும் தங்களது படத்திற்கு மக்களிடம் ஆதரவு கிடைப்பதே பெரிய விசயம். இதில், இப்படி புரொமோசனுக்கு வராமல் நாயகனும், நாயகியும் முரண்டு பிடிக்கிறார்களே என கவலையில் இருக்கிறாராம் இயக்குநர் நந்தன்.


Click it and Unblock the Notifications











