மீண்டும் அஜித் பட ரெஃபரன்ஸ்.. மால்டோ கித்தாப்புலே எப்படி இருக்கு?

Recommended Video

Hero Official Teaser Review | Sivakarthikeyan| Arjun | Yuvan Shankar Raja | P.S.Mithran

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'மால்டோ கித்தப்புலே' பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்டாங்காரன், புள்ளிங்கோ வரிசையில் புதிய வார்த்தையான மால்டோ கித்தாப்புலே என்ற வார்த்தையை கொண்டு உருவாகியுள்ள இந்த பாடல் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. சமீபத்தில் வெளியான ஹீரோ படத்தின் டீசரில், ஏழைகளுக்கு கல்வி கிடைப்பதில் பணக்காரர்கள் செய்யும் சதியை முறியடிக்க ஒரு ஹீரோ தேவை என அர்ஜுன் சொல்ல, ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவாகும் டீசர் அனைவரையும் கவர்ந்தது. வரும் டிசம்பர் 20ம் தேதி ஹீரோ திரைக்கு வருகிறது.

போட்டி இல்லை

போட்டி இல்லை

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று திரைப்படமும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, சூரரை போற்று ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு பெரிய போட்டி இல்லை.

மால்டோ கித்தாப்புலே

சிம்டாங்காரன், புள்ளிங்கோ மாதிரி வடசென்னை வாசிகள் பயன்படுத்தும் மற்றுமொரு மாயாஜால வார்த்தை தான் இந்த மால்டோ கித்தாப்புலே. டங்கா மாரி ஊதாரி, ஆளுமா டோலுமா, டமாலு டுமிலு, கோவிந்தமாளே போன்ற கானா பாடல்களை எழுதிய ரோக்கேஷ் தன இந்த பாடலையும் எழுதியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஷியாம் விஸ்வநாதன் இந்த பாடலை பாடியுள்ளார். ராயபுரம் பீட்டரு, கருத்தவன்லாம் கலீஜாம் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு மால்டோ கித்தப்புலே பாடல் ஓபனிங் பாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டு எப்படி இருக்கு?

பாட்டு எப்படி இருக்கு?

மால்டோ கித்தாப்புலே பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கருத்தவன்லாம் கலீஜா பாடல் பேக்ரவுண்ட் போலவே தெருவில் இறங்கி ராஜூ சுந்தரம் மாஸ்டர் ஸ்டெப்பில் குத்தாட்டம் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அவருடன் ரோபோ சங்கரும் நடனமாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் ஷியாம் விஸ்வநாதன் குரலில், மற்றுமொரு கருத்தவன்லாம் கலீஜா போன்ற பாடலாக மால்டோ கித்தாப்புலே உருவாகியுள்ளது. கூடவே கல்வி குறித்த விஷயங்களையும் அரசியலையும் பாடல் தொட்டு சென்றுள்ளது.

அஜித் ரெஃபரன்ஸ்

அஜித் ரெஃபரன்ஸ்

அஜித்தின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மிஸ்டர் லோக்கல் படத்தில், ஹெல்மட் போடும் சீனில் 'நமக்கு தல தான் முக்கியம்' என வசனம் பேசியிருப்பார். அதே போல இந்த பாடலில், 'நீ கரெக்டாக உழைச்சா வரும் வலிமை' என அஜித்தின் வலிமை படத்தின் ரெஃபரன்ஸை வைத்துள்ளார்.

ஏன் இன்னிக்கே?

ஏன் இன்னிக்கே?

மால்டோ கித்தாப்புலே பாடல் நாளை நவம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்குத் தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினியின் தர்பார் பட மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதால், இன்றே இந்த பாடலை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X