சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன்.. ஆனா அந்த க்ரிஷ் மாஸ்க் மட்டும் கொஞ்சம் இடிக்குதே?

Recommended Video

Hero Second Look:மிரட்டும் சிவகார்த்திகேயன் பட Second Look

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் புதிய போஸ்டரை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முழு சூப்பர் ஹீரோவாக மாஸ்க் அணிந்து சிவகார்த்திகேயன் கம்பீரமாக நிற்க பேக்ரவுண்டில் மிகப்பெரிய பில்டிங், ஃபையர் பிளாஸ்ட் போன்று ஹீரோ படத்தின் புதிய போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகிறது.

இரும்புத்திரை

இரும்புத்திரை

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஹேக்கிங் மூலம் டார்க் வேர்ல்ட் எப்படி உலகை ஆட்சி செய்கிறது என்பதை அற்புதமாக விஷால் மற்றும் அர்ஜுனின் ஆக்‌ஷனில் எடுத்துக் காட்டியிருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன். இரும்புத்திரையின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கியுள்ளார் பி.எஸ். மித்ரன்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் பெரிய அளவில் இதுவரை வந்ததில்லை. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் முகமூடி படம் சூப்பர் ஹீரோ பேட்மேன் பட கான்செப்டில் அப்படியே வெளியானது. ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. இந்நிலையில், தொடர்ந்து மாஸ் காட்டி வரும் சிவகார்த்திகேயன், முதன்முறையாக சூப்பர் ஹீரோ அவதாரத்தை ஹீரோ படத்தின் மூலம் எடுத்துள்ளார்.

ஹீரோ

ஹீரோ படத்தின் சைட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், ஹீரோ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். முழு சூப்பர் ஹீரோவாக மாஸ்க் அணிந்து சிவகார்த்திகேயன் கம்பீரமாக நிற்க பேக்ரவுண்டில் மிகப்பெரிய பில்டிங், ஃபையர் பிளாஸ்ட் போன்று ஹீரோ படத்தின் புதிய போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

செகண்ட் சிங்கிள்

யுவன் சங்கர் ராஜா இசையில் முதல் சிங்கிளான மால்ட்டோ கித்தாப்புலே ரிலீசாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ஹீரோவாக சிவகார்த்திகேயன் சேஞ்ச் ஓவராகும் 'ஹீரோ' செகண்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

கல்யாணி பிரியதர்ஷன்

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் முதன்முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கல்யாணி, தொடர்ந்து மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். ஹீரோ படம் தமிழில் கல்யாணி பிரியதர்ஷினிக்கு ஒரு நல்ல என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிட்டிங் தலைவா

ஹீரோ படத்தின் புதிய போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் ஹீரோ லுக்கை ஸ்கெட்ச் செய்து வரைந்துள்ள இந்த ரசிகர் படத்திற்காக வெயிட்டிங் தலைவா என கமெண்ட் செய்துள்ளார்.

சந்தோஷத்தில் கண் கலங்குது

தலைவா உன்னை இப்படி பார்க்கும் போது சந்தோஷத்தில் கண் கலங்குது மக்களை மகிழ்விக்கும் கலைஞன் லவ் யூ எஸ்.கே என இந்த தீவிர ரசிகர் அன்பு மழை பொழிந்துள்ளார்.

க்ரிஷ் போஸ்டர்

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான க்ரிஷ் படத்தின் போஸ்டர் தான இது, ஏன் நியூ போஸ்டர்ன்னு சொல்றிங்கன்னு போஸ்டரை இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

புதிய ஸ்டில்

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் புதிய ஸ்டில் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் அர்ஜுன், சிவகார்த்திகேயனுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாதாரண மனிதனாக இருக்கும் சிவகார்த்திகேயனை அர்ஜுன் தான் இந்த படத்தில் சூப்பர் ஹீரோவாக டிரெயின் பண்ணுகிறார் என்பது டீஸரில் காண்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X