இதுக்குப் பிறகு நல்ல முகூர்த்த தேதி இல்லையாமே.. இந்த லாக்டவுனில் காதலியை மணந்து கொண்ட பிரபல ஹீரோ!

By

ஐதராபாத்: பிரபல ஹீரோவின் திருமணம் இன்று அதிகாலை காலை எளிமையாக நடந்தது.

பிரபல தெலுங்கு ஹீரோ, நிகில் சித்தார்த்தா. யுவதா, ஓம் சாந்தி, டிஸ்கோ, ஸ்வாமி ரா ரா, காத்திக்கேயா, எக்கடிக்கி போதாவு சின்னவாடு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது காத்திகேயா 2, 18 பேஜஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரும் பல்லவி வர்மா என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

 நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பல்லவி வர்மா, டாக்டராக இருக்கிறார். காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 14 ஆம் தேதி இவர்கள் திருமணத் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

 தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் திருமணத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்தனர். கொரோனாவால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்க முடியாது என்பதாலும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாலும் லாக்டவுன் முடிந்த பின் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

 முகூர்த்த தேதி

முகூர்த்த தேதி

அதன்படி மே 14 ஆம் தேதி (இன்று) திருமணத்துக்கு நாள் குறித்தனர். லாக்டவுன் நீடிக்கப்பட்டதால், இந்த தேதியையும் தள்ளி வைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நல்ல முகூர்த்த தேதி இல்லை என்பதால் இன்றே திருமணத்தை நடத்தி முடிக்க, குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, ஐதராபாத் அருகில் உள்ள ஷமிர்பேட் ரிசார்ட் ஒன்றில் இவர்கள் திருமணம் இன்று காலை நடந்தது.

Recommended Video

Wow: Rana Daggubati confirms his relationship | Miheeka Bajaj
 திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். லாக்டவுன் முடிந்ததும் திருமண வரவேற்பை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X