96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்

சென்னை : அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயகத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் 96.படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர் ,கௌரி கிஷான் ,தேவதர்ஷினி, ஜனகராஜ்,வர்ஷா போலம்மா,ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்

96என்றவுடன் நமது நினைவுக்கு வருவது த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் தான் .பள்ளி பருவ காதல் அதற்கு பின் ஏற்படும் பிரிவு பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் காதலர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீரா காதல் அதை வெளிப்டுத்த முடியாத சூழ்நிலை மீண்டும் பிரிவு என ஒரு இருக்கமான காதல் கவிதை தான் 96 .

 Hero of the film 96 wishes the director a Happy Birthday

கடந்த வருடம் அக்டோபர் 4ல் வெளியாகி மிக பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி நம் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது இந்த 96 படம்.

இன்று 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் பிறந்தநாள் .படத்தில் சிறுவயது ராமாக நடித்த ஆதித்யா பாஸ்கர் ,தனது இன்ஸ்டாகிராம் வளைத்தல பக்கத்தில் இயக்குனர் பிரேம் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் 96 படம் எடுக்கும் போது எடுக்க பட்ட பள்ளி பருவ புகைப்படத்தையும் தற்போது சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ஆதித்யா பாஸ்கர் .

 Hero of the film 96 wishes the director a Happy Birthday

96 படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் இசை .இந்த படத்தில் இடம்பிடித்த பாடல்கள் மற்றும் பின்னனி இசை மக்களை வெகுவாக கவரந்தது . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் 'கோவிந்த் வசந்தா' .இவர் நார்த் 24 காதம் ,வேகம்,நகர வருதி நடுவில் இன்ஞான்,100 டேஸ் ஆப் லவ் ,ஹராம் ,சோலோ என பல மளையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார் .இவர் தமிழில் அசுரவதம் ,சீதக்காதி,உரியடி 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து உள்ளார் .இவர் தற்போது காரத்தியின் தம்பி படத்திற்கும் இசையமைத்து வருகிறார் .

 Hero of the film 96 wishes the director a Happy Birthday

தற்போது இயக்குனர் பிரேம் குமார் 96 படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் .தெலுங்கு வெர்சனில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார் ,விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சார்வனந்த் நடிக்கிறார் இவர் தமிழில் 'எங்கேயும் எப்போதும்' மற்றும் 'ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படங்களில் நடித்திருப்பார் .

தமிழை போலவே தெழுங்கிலும் படம் மாபெரும் வெற்றி அடையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் . இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடக்ஸன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X