Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுசி கணேசன் படத்தில் ஹீரோ வாய்ப்பு...குவிந்த வீடியோக்கள்
இயக்குநர் சுசி கணேசன் இயக்கும் 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் ஹீரோவாக நடிக்க இளைஞர்களிடம் பொதுபோட்டி நடத்தப்படுகிறது. 2 நிமிட வீடியோ அனுப்பினால், அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் வருங்கால சூப்பர் ஸ்டார் சீரிஸ் மூலம் தேர்வு செய்யப்படுவார் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான வீடியோக்கள் குவியத் தொடங்கிய நிலையில் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
4
நாயகிகளுடன்
நட்டி
கதாநாயகனாக
நடிக்கும்
'வெப்'...விறுவிறு
த்ரில்லராக
கார்த்திக்ராஜா
இசையில்

ஹீரோ வாய்ப்புத்தருகிறார் சுசி கணேசன்...நீங்க ரெடியா
இயக்குநர் சுசி கணேசன் பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றியதால் திரையுலகில் நுழையும்போதே பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியவர். திரைத்துறைக்கு வரும்முன் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு பிரசாந்த், சினேகா நடிப்பில் விரும்புகிறேன் (2002) என்கிற படத்தை இயக்கினார்.

1980 ஆம் ஆண்டு மதுரை சம்பவ பின்னனியில் எடுக்கப்படும் கதை
பின்னர் பிரசன்னா, கனிகாவை வைத்து 5 ஸ்டார் என்கிற படத்தையும், ஜீவனை கதாநாயகனாக போட்டு திருட்டுப் பயலே படத்தையும், பின்னர் விக்ரம், ஷ்ரேயா நடிப்பில் கந்தசாமி, அதன் பின்னர் திருட்டுப்பயலே 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1980 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

ஹீரோவைத்தேடும் படக்குழுவினர்
ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, "குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதலின் படி, நீங்கள் நடித்த வீடியோவை , இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் www.4vmaxtv.com தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் , மரியாதைக்குரிய சேனலில் , மிக பிரமாண்டமாக நடக்கப்போகும் "வருங்கால சூப்பர் ஸ்டார் 2022"- ஷோவில் பங்கு பெறும் வாப்பைப் பெறுவீர்கள் . 2 நிமிட வீடியோவுடன் தயாராகுங்கள் ஷோவின் இறுதியில் , வெற்றி பெறும் போட்டியாளர், 1980-களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் , சுசி கணேசனின் "வஞ்சம் தீர்த்தாயடா " திரைப்படத்தின் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்படுவீர்கள்" எனப் படக்குழு அறிவித்திருந்தது.

கடைசி தேதி பிப்.19...வந்து குவிந்த வீடியோக்கள்
இந்நிலையில் ஏராளமான வீடியோக்கள் வரத்தொடங்கியுள்ளது. இன்று தனது கதாநாயகன் தேடலுக்கான நடவடிக்கை குறித்த வீடியோவை சுசிகணேசனின் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹீரோ தேடலுக்காக இளைஞர்கள் அனுப்பியுள்ள வீடியோக்களை தனது படக்குழுவினருடன் அமர்ந்து பார்க்கும் இயக்குநர் சுசி கணேசன் ஆலோசனை கொடுத்து வருவதாக அந்த வீடியோவில் உள்ளது. இந்த கதாநாயகன் தேடலுக்கான கடைசி தேதி பிப்.19 என்பதால் வீடியோ அனுப்பாதவர்கள் அனுப்பிவைக்கலாம்.