ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா? வில்லனா?

Recommended Video

தன் STUNT ஐ தானே கலாய்த்த விஷால் | ACTOR VISHAL SPEECH | ACTION MOVIE PRESSMEET | FILMIBEAT TAMIL

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.

இந்த படத்தில் விஷாலுடன், நடிகை தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகான்க்‌ஷா புரி, கபிர் துஹான், பழ. கருப்பையா, ராம்கி, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Hero or Villain? New look of Vishal makes a twist in Action Movie

சுமார் 55 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விஷால் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் என டீசர் மற்றும் டிரைலர்களில் காண்பிக்கப்பட்ட நிலையில், தற்போது, பதான் லுக்கில் நடிகர் விஷால், மீசை மற்றும் தாடியுடன் மிரட்டுகிறார்.

இந்த புதிய லுக்கை வெளியிட்ட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், விஷால் ஹீரோவா? வில்லனா? நாளை தியேட்டரில் கண்டுபிடியுங்கள் என புதிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகவுள்ள ஆக்‌ஷன் படத்தில் விஷால் இரு வேடங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்துள்ளாரா, இல்லை, தீவிரவாதிகளை உளவு பார்க்க, இந்த பதான் கெட்டப் போட்டுள்ளாரா என்பது நாளை தெரிந்துவிடும்.

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படத்திற்கு இருந்த ரிலீஸ் பிரச்சனைகள் சரியாகி விட்டதாகவும், நாளை நிச்சயம் அந்த படமும் ரிலீசாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளதால், விஷால், விஜய் சேதுபதி போட்டி நாளை உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X