டிரெண்டிங்கில் ஆயிரம் முகங்கள்.. இளையராஜா குரலில் ஹீரோ கிளைமேக்ஸ் பாடல் ரிலீஸ்!

சென்னை: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் நடிப்பில் வெளியான ஹீரோ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ஹீரோ படத்தில் கிளைமேக்ஸில் வரும் 'ஆயிரம் முகங்கள்' பாடலின் லிரிக் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Hero’s Aayiram Mugangal song out now

பா. விஜய் வரிகளில் இசைஞானி இளையராஜா இந்த பாடலை பாடியுள்ளார். தற்போது ஹீரோ படத்தின் லாஸ்ட் சிங்கிள் என படக்குழு வெளியிட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் #AayiramMugangal என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பாடல் தனது மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன் ட்வீட் போட்டுள்ளார். மேலும், இப்படியொரு அருமையான பாடலை கொடுத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள ரஃப் நோட் மேட்டர் வைரலாகவும், மீம் கன்ட்டென்ட்டாகவும் மாறியுள்ளது. ஆனால், இரும்புத்திரை பெற்ற அளவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஹீரோவுக்கு கிடைக்கவில்லை என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X