twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவை முதலில் காப்பாற்றுங்கள்- ஹீரோக்களுக்கு ஆர்.வி.உதயகுமார் அட்வைஸ்

    |

    சென்னை: கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கல் அரசியலில் இறங்கி நாட்டை காப்பாற்றுவதை விட, சினிமாவில் உள்ள சிக்கல்களை தீர்க்கட்டும் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

    இதுவரை அமைதியாக இருந்த ஆர்.வி. உதயகுமார் தற்போது அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் ஆவேசமாக, ஆக்கப்பூர்வமாகவும் பேசுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

    Hero’s should solve the problems in Cinema-R.V.Udayakumar

    விசினிமா குளோபஸ் நெட்ஒர்க்ஸ் தயாரிப்பில் விஜயசேகரன் இயக்கிய எவனும் புத்தனில்லை திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், செல்வமணி, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷாநேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா

    அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், இயக்குனர் விஜயசேகரன் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து பேசுகையில் பல்வேறு திரையுலக பிரச்சனைகளை குறித்து பேசினார். அப்போது அவர் நாமும் பல விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கிறோம் ஆனால் தீர்வு என்பது தான் கிடைக்கவில்லை.

    சினிமா என்பது ஆளுமை நிறைந்த ஊடகம். இங்கே எந்த ஒரு அமைப்பும் சரியாக இல்லை. திருத்த வருபவனும் திருடி கொண்டு போய்விடுகிறான். கோடிக் கணக்கில் சம்பளம் பெரும் பெரிய ஹீரோக்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து பேசினாலே திரையுலகில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். அதை விடுத்து அரசியலில் இறங்கி நாட்டை காப்பாற்றுவதை விட தன்னை வளர்த்த இந்த திரையுலகில் இருக்கும் சிக்கல்களை சரி செய்யலாம்.

    தமிழ் சினிமாவில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. குடும்பம் என்ற உணர்வு சிறிதும் இல்லை. அந்த காலத்தில் நடிகர்களுக்கென தனி கேரவன் எல்லாம் கிடையாது. தென்னை ஓலையைத் தான் போட்டு படுத்துக்கொள்வார். அவர்களைப் போன்ற எளிமையானவர்களை எல்லாம் இப்போது பார்க்கவே முடியவில்லை என்றார்.

    கவிஞர் சினேகன் இப்படத்தில் பதினைந்து பெண்களுக்கு மத்தியில் மிதந்துள்ளார். அவர் இந்த ஜென்மத்தில் பிறந்த பலனை அடைந்துவிட்டார் என நகைச்சுவையுடன் கவிஞர் சினேகனை கிண்டலடித்தார்.

    விஜயசேகரன் இந்த விழாவை நடத்தியதில் இருந்து தெரிகிறது அவர் எவ்வளவு புத்திசாலியாக இருப்பார் என்று. அவருடைய படத்தையும் அப்படி தான் நன்றாக எடுத்திருக்கிறார். இந்த விழாவை போல இந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

    Read more about: snehan movies
    English summary
    Director RV Udayakumar said that the millions of salaried heroic, rather than get into politics and save the country, solve the problems in the cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X