27 தலைவர், 28 தனுஷ், 29 சிவகார்த்திகேயன்.. அடடா என்ன ஒரு ஹீரோ ஸ்கெட்ச்!
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் நவம்பர் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஹீரோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மால்ட்டோ கித்தாப்புலே பாடல் ஹிட் ஆகியுள்ள நிலையில், அடுத்த பாடலை படக்குழு வெளியிடுகிறது.
27ம் தேதி
ரஜினியின் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சும்மா கிழி' பாடல் வரும் நவம்பர் 27ம் தேதி ரிலீசாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
28ம் தேதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் நேற்று வெளியான நிலையில், ரசிகர்கள் அனைவரும், ஜி.வி. பிரகாஷிடம் அசுரன் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். 27ம் தேதி மாமனார் ரஜினியின் இசை திருவிழா இருப்பதால், 28ம் தேதி அசுரன் ஒ.எஸ்.டி வெளியாகிறது.
ஹீரோ ஸ்கெட்ச்
பிளே ஹீரோ வீடியோ கேமை வெளியிட்டு பெரிய அளவில் விளம்பரத்தை ஆரம்பித்து வைத்துள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படக்குழு, ஹீரோ படத்தின் செகண்ட் சிங்கிளை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தலைவருக்கும் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய தனுஷுக்கும் வழிவிட்டு நவம்பர் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறது.

மும்முனை போட்டி
சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சோலோ ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜீவாவின் சீறு மற்றும் ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. மேலும், சில படங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











