சிவகார்த்திகேயன் படத்திற்கு இப்படியொரு புரொமோஷனா.. ஏ.ஆர். கேம் வடிவில் வரும் ஹீரோ!
சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்திற்கான புரொமோஷன் பணிகளை வேற லெவலில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
Play Hero எனும் ஆக்மென்டட் ரியாலிட்டி கேம் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஹீரோ
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. கல்வித் துறையில் நடக்கும் ஊழல்களை களைய சாதாரண மனிதன் எப்படி ஹீரோவாகிறான் என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன்
அஞ்சான் மற்றும் கோச்சடையான் படங்களின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு அப்போது டிரெண்டில் இருந்த வீடியோ கேம் வெர்ஷனை வெளியிட்டு புரொமோஷன் செய்தது. ஆனால், இரண்டு படங்களும் அதன் கேம்களும் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

விளம்பர யுக்தி
சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகும் முன் வித்தியாசமான விளம்பர யுக்தி தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. ரெமோ படத்தின் ரிலீஸ் சமயத்தில் தியேட்டர்களில் க்யூபிட் பொம்மைகளை நிறுவினர். சீமராஜா படத்தின் போது, பயோஸ்கோப் வைத்து விளம்பரப்படுத்தினர். இந்நிலையில், தற்போது அடுத்த கட்ட விளம்பர யுக்தியை படக்குழு தொடங்கியுள்ளது.
முதல் முறை
தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு படத்திற்கும் ஏ.ஆர். என அழைக்கப்படும் Augmented Reality கேம் வெளியிடப்படவில்லை. முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்திற்கு இதுபோன்ற ஒரு கேம் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக கே.ஜே.ஆர். நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
எஸ்.கே. புள்ளிங்கோ
பிளே ஹீரோ குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ட்விட்டர் டிரெண்டிங்கை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிடித்துள்ளனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பப்ஜி, சி.ஓ.டி கேம்களை நார்மல் புள்ளிங்கோ விளையாடட்டும், எஸ்.கே. புள்ளிங்கோலாம் ஹீரோ கேம் விளையாடலாமா என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











