ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் 3வது சிங்கிள் நாளை வெளியாகிறது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இரும்புத்திரை படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன், சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ எனும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரொமான்டிக் பாடலான ஓவரா ஃபீல் பண்ணுறேன் பாடல் நாளை மாலை 5மணிக்கு வெளியாகிறது. படக்குழு தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யுவன் மேஜிக்

யுவன் மேஜிக்

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இளைஞர்களை தனது மாய இசையால் கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இரும்புத்திரை படத்தைத் தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ படத்திற்கும் யுவன் இசையமைத்துள்ளார்.

2 பாடல்கள்

2 பாடல்கள்

டிசம்பர் 20ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் ரிலீசாகிறது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான மால்டோ கித்தாப்புலே மற்றும் ஹீரோ டைட்டில் டிராக் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஓவரா ஃபீல் பண்ணுறேன்

நடிகர் சிவகார்த்திகேயன் சும்மா ஃபீல் பண்ணாலே ரசிகைகள் எல்லாம் ஆல் அவுட் ஆகிடுவாங்க, இப்போ ரொமான்டிக்கா ஓவரா ஃபீல் பண்ணும் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அடுத்து அதுதான் இளம் ரசிகைகளில் ஹாட் லிஸ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பா. விஜய்

பா. விஜய்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பா. விஜய் ஹீரோ படத்திற்காக பாடல்களை எழுதியுள்ளார். ஹீரோவின் இலக்கணத்திற்கு அவர் எழுதிய ஹீரோ டைட்டில் டிராக் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பயங்கர ரொமான்டிக்காக ஓவரா ஃபீல் பண்ணுறேன் பாடலை பா. விஜய் எழுதியுள்ளார்.

க்யூட் ஜோடி

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன், தெலுங்கு, மலையாள படங்களை தொடர்ந்து தற்போது தமிழில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த ஜோடி ரொம்ப க்யூட்டா இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: hero ஹீரோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X