ஹீரோ டைட்டில் சிவகார்திகேயனுக்கா விஜய் தேவர கொண்டாவுக்கா?
சென்னை: ஹீரோ படம் என்று இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்க இருக்காராம்.
படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துகொண்டு இருக்க, இதே படத்தின் டைட்டிலை விஜய தேவார கொண்டாவும் அறிவித்து உள்ளார் என்று தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்வியில் ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கும் நடிகர் சிவ கார்த்திகேயன் இந்த செய்தியை கேட்டு இன்னும் கடுப்பாகி ரவுடி ரேஞ்சுக்கு பேசஆரம்பிச்சுட்டார் என்று சொல்கிறார்கள்.
இயக்குநர் ராஜேஷை முழுசா நம்பித்தானே என்னை ஒப்படைச்சேன்..இப்படி கவுத்துட்டார்னு பார்க்கறவங்க கிட்ட புலம்பும் சிவா...இப்போது ஏற்பட்டு இருக்கும் டைட்டில் பிரச்னையை பத்தி எனக்கு ஒன்னும் கவலை இல்லைன்ற ரேஞ்சில பேசறாராம்.
இப்படி கண்மண் தெரியாமல் கோபத்தில் இருக்கும் சிவ கார்த்திகேயன் ஹீரோ டைட்டிலப் பத்தி பிரச்சனை வரும்போது பேசிக்கலாம் என்று இயக்குநரிடம் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம்.
மித்ரனும்...என்னபிரச்சனை வந்துட போகுது... சமரசம் பண்ணும்போது பார்த்துக்கலாம்னு இருக்காராம்.
படம் ஃபெயிலியரானா அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்? நல்ல படத்தைத் தானே மக்கள் பார்ப்பாங்க,,, அதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோவம் ஆகாதுங்க.


Click it and Unblock the Notifications











