'ஹீரோ': சிவகார்த்திகேயன் படத்திற்கு பூஜை போட்ட உடனேயே பிரச்சனையா?
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு நேற்று பூஜை போட்டு ஹீரோ என்று பெயர் வைத்தனர்.
புதுமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் படத்திற்கும் ஹீரோ என்று தான் பெயர் வைத்துள்ளனர்.

ஹீரோ
ஹீரோ தலைப்பு எனக்கு சொந்தமானது. அதை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கலாம் என்று ஆனந்த் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தனது தலைப்பை பயன்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

படம்
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதியுள்ளேன். குற்றமே தண்டனை படத்திற்கு மணிகண்டனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். பல நாவல்கள் எழுதியுள்ளேன். விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறேன். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பதிவு
என் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பை தேர்வு செய்து ஓராண்டுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தோம். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் ஆனந்த்.

சிவகார்த்திகேயன்
ஹீரோ என்ற தலைப்பு எங்களுக்கு தான் சொந்தம். அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த தலைப்பை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என்று ஆனந்த் அண்ணாமலை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











