twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கானா பிரச்சினையால் சிரஞ்சீவி குடும்பத்தினர் படங்கள் முடக்கம்!

    By Shankar
    |

    ஹைதராபாத்: நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்யாததால் அவரது குடும்பத்தினர் நடித்துள்ள படங்களை வெளிவர விடாமல் முடக்கி வைத்துள்ளனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதைக் கண்டித்து மத்திய காங்கிரஸ் அரசில் பதிவி வகிக்கும் சிரஞ்சீவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று 'ஐக்கிய ஆந்திரா' ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

    அதுவரை சிரஞ்சீவி குடும்பத்தினர் நடித்த படங்களை திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

    ராம்சரண்

    ராம்சரண்

    சிரஞ்சீவி குடும்பத்தில் நான்கு பேர் கதாநாயகர்களாக உள்ளனர். சிரஞ்சீவி மகன் ராம்சரன் முன்னணி ஹீரோவாக உள்ளார். இவர் நடித்த ‘யவடு' படம் கடந்த ஜூலை வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் இப்போது தெலுங்கானா பிரச்சினையில் தள்ளிப் போய்விட்டது.

    பவன் கல்யாண்

    பவன் கல்யாண்

    சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள ‘அத்தரந்தகி தாரேதி' என்ற படம் முடிந்து இன்னும் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது.

    அல்லு அர்ஜூன்

    அல்லு அர்ஜூன்

    ராம்சரன் நடித்துள்ள ‘தூபான்' என்ற படமும் முடிவடைந்து திரையிட முடியாமல் உள்ளது. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த அல்லு அர்ஜுன் படங்களுக்கும் இதே நிலை.

    சிரஞ்சீவி குடும்பத்தினர் படத்தை திரையிட்டால் தாக்குதல் நடக்கலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுவதால் படத்தை திரையிட மறுக்கின்றனர்.

    ஜுனியர் என்டிஆருக்கும்

    ஜுனியர் என்டிஆருக்கும்

    ஜூனியர் என்.டி.ஆர். படத்தையும் தெலுங்கானா பகுதிகளில் திரையிட விட மாட்டோம் என்று தெலுங்கானா ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளனர்.

    இந்த தெலுங்கானா பிரச்சினையில் தெலுங்கு நடிகர்கள் நிலைமைதான் பெரும் சிக்கலாக உள்ளது.

    English summary
    Heroes from Chiranjeevi family, Ramcharan, Pawan Kalyan, Allu Arjun are suffered a lot in Telangana issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X