twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2014-ல் எடுபடாமல் போன ஹீரோக்கள்... ஒரு அலசல்

    By Shankar
    |

    இந்த 2014-ம் ஆண்டு பெரிய ஹீரோக்கள், அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹீரோக்கள் அனைவருக்குமே ஒரு சோதனை ஆண்டாக மாறிவிட்டது.

    குறிப்பாக 2013-ல் நல்ல வெற்றியைச் சுவைத்த இந்த ஹீரோக்கள் 2014-ல் தோல்வியைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது.

    இந்த நிலைக்கு சோஷியல் மீடியா எனப்படும் பேஸ்புக், ட்விட்டர் போன்றவையும் முக்கிய காரணம் என்கிறார்கள் திரையுலகினர். இவற்றின் அதிகபட்ச தாக்குதல் காரணமாக படத்துக்குக் கிடைக்க வேண்டிய ஆரம்ப வசூல் கூட பாதிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

    சூர்யா

    சூர்யா

    2013-ல் சிங்கம் 2 என்ற மெகா வெற்றிப் படத்துக்குப் பிறகு, 2014-ம் ஆண்டில் சூர்யா நடித்த அஞ்சான் வெளியானது. இந்தப் படத்தை எந்த அளவு மோசமான முறையில் விமர்சிக்க முடியுமோ அந்தளவு விமர்சித்துவிட்டனர். இயக்குநர் லிங்குசாமியும், சூர்யாவும் இணைந்த முதல் படமான இது இருவருக்குமே சந்தோஷத்தைத் தரவில்லை.

    விஜயசேதுபதி

    விஜயசேதுபதி

    2012, 2013-ல் அடுத்தடுத்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜயசேதுபதி. ஆனால் இந்த ஆண்டு அவர் நடித்த ஒரு படம் கூட வெற்றியைப் பெறவில்லை. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் மூன்றுமே தோல்வியைச் சந்தித்தன. கூடவே வசந்தகுமாரன் படம் தொடர்பில் தயாரிப்பாளருடான சர்ச்சை வேறு. விஜயசேதுபதிக்கு இது ஒரு சோதனை ஆண்டுதான். ஆனால் வரும் 2015-ல் வெளியாகும் ஜனநாதனின் புறம்போக்கு விஜயசேதுபதிக்கு பெரிய ஏற்றம் தரும் என நம்புகிறது கோடம்பாக்கம்.

    விக்ரம்

    விக்ரம்

    விக்ரம் நடித்து கடைசியாக வெளியான படம் எது என்று கேட்டால் சட்டென பதில் சொல்ல பலரும் தடுமாறுவார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது அவர் நிலைமை. தாண்டவம் படத்தின் தோல்வி, ஐ படத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவர் எடுத்துக் கொண்டது, கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் அவரது இடத்தை காணாமல் அடித்துவிட்டது. இந்த ஆண்டு ஐ வந்திருக்க வேண்டும். ஆனால் தள்ளித் தள்ளி அடுத்த ஆண்டுக்குப் போய்விட்டது. ஆனால் 2015-ல் அடுத்தடுத்து இரு படங்கள் அவருக்கு உள்ளன.

    ஜெயம் ரவி

    ஜெயம் ரவி

    2009-ல் வெளியான பேராண்மை படத்துக்குப் பிறகு ஒரு பெரிய வெற்றிப் படம் ஜெயம் ரவிக்கு அமையவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான நிமிர்ந்து நில் ஓரளவு நல்ல பெயரைத் தந்தாலும், வணிக ரீதியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. வரும் 2015-ல் அவர் நடிப்பில் பூலோகம், ஜெயம் ராஜா படம் உள்பட நான்கு படங்கள் வெளியாக உள்ளன.

    ஜீவா

    ஜீவா

    இந்த ஆண்டு ஜீவாவுக்கு வெளியான ஒரே படம் யான். பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார்கள் அந்தப் படத்துக்கு. படமும் தோல்வி, கூடவே முழுக்க முழுக்க காப்பியடிக்கப்பட்ட கதை என்ற குற்றச்சாட்டும்.

    சிம்பு

    சிம்பு

    இந்த ஆண்டும் சிம்புவுக்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் வாலு படத்தை இழுத்துக் கொண்டே போவது, ஹன்சிகாவுடன் காதல் முறிவு, நயன்தாராவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பது என பரபரப்பாக செய்திகளில் இருந்து கொண்டே இருந்ததுதான் இந்த ஆண்டில் அவர் சாதனை!

    ஜெய்

    ஜெய்

    நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தனியாக ஒரு ஹிட் படம் கூடக் கொடுக்காதவர் ஜெய். இந்த ஆண்டு அவர் சோலோவாக நடித்து வெளியான படங்கள் வடகறி மற்றும் திருமணம் எனும் நிக்காஹ். இரண்டுமே அவுட்.

    English summary
    2014 turned out to be a troublesome year for some heroes those tasted success in 2013.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X